| பாகிஸ்தானியர்கள் தீவிரவாதிகள் அல்ல: உலக நாடுகளிடம் கலைஞர்கள் பிரசாரம் |
|
|
| வா.கி.குமார் | |
| 16. July 2008 07:23 | |
|
இந்தப் பிரசாரத்தை மேற்கொள்வதற்காக அந்நாட்டின் மூத்த கலைஞர்கள் அனைவரும் கூட்டாக கையெழுத்திட்டுள்ளனர். உலக அரங்கில் பாகிஸ்தான் ஒரு தீவிரவாத நாடாக சித்தரிக்கப்பட்டு வருகிறது. உலக நாடுகளின் இத்தகு நிலைக்கு, அங்கு நாள்தோறும் நடைபெறும் குண்டுவெடிப்பு சம்பவங்களே சாட்சியாகும். மேலும் ஸ்திரத்தன்மையற்ற அரசியலும், பொருளாதார ஏற்றத் தாழ்வும் உள்நாட்டு குழப்பத்திற்கு வழிவகுப்பதாக உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானியர்கள் தீவிரவாதிகள் அல்ல என்ற நிலையை உலக நாடுகளிடம் விளக்க, அந்நாட்டு கலைஞர்கள் பிரசாரம் செய்ய உள்ளனர். சகிப்புத் தன்மையையும், நல்லிணக்கத்தையும் போதிப்பதே இஸ்லாம் மதத்தின் நோக்கமாகும். இதனை சர்வதேச சமூகத்திடம் எடுத்துக் கூறவும் கலைஞர்கள் தீர்மானித்துள்ளனர். தீவிரவாதத்திற்கு எதிரான இந்தப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள, கராச்சியில் இருந்து இயங்கி வரும் தன்னார்வ அமைப்பு ஒன்று, இதற்காக அந்நாட்டு மக்களிடம் கையெழுத்து இயக்கத்தையும் நடத்தி வருகிறது. இந்த முயற்சியை ஆதரித்து, பாகிஸ்தான் நாட்டின் மூத்த கலைஞர்கள் பலரும் தீவிரவாதத்திற்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட கையெழுத்திட்டுள்ளனர். |
| < முந்தைய | அடுத்த > |
|---|





உலக அளவில் பாகிஸ்தானியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுவதற்கு எதிராக அந்நாட்டு கலைஞர்கள் உலக முழுவதும் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளனர்.




