29. August 2008 19:49
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
8. August 2008 18:51
27. August 2008 15:01
2. August 2008 23:48
3. August 2008 15:57
14. August 2008 16:37
ஒரிசாவில் மாவோயிஸ்ட் தாக்குதல்: 21 பொலிஸார் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
17. July 2008 05:53

tamilnau_police.jpgஒரிசாவில் பொலிஸார்சென்ற வேன்மீது மாவோயிஸ்டுகள் புதன்கிழமை நடத்திய தாக்குதலில் 21 பொலிஸார் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஒரிசாவில் அண்மையில் பொலிஸார் சென்ற படகை மாவோயிஸ்டுகள் மூழ்கடித்ததில் 35 போலீஸôர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு பாஜக பிரமுகர் ஒருவரது வீட்டை மாவோயிஸ்டுகள் தாக்கினர்.

தாக்குதல் நடந்த இடத்தைப் பார்வையிடுவதற்காக சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த 21 பேர் வேனில் சென்று கொண்டிருந்தனர்.

அந்த வேன் சென்ற சாலையில் மரங்களைப் போட்டு மாவோயிஸ்டுகள் தடையை ஏற்படுத்தியிருந்தனர்.

அந்தப் பகுதிக்கு வேன் வந்ததும் மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் வேன் மீது சரமாரியாகச் சுட்டனர். அதே நேரத்தில் கண்ணி வெடியையும் வெடிக்கச் செய்தனர்.

பொலிஸார்  சென்ற வேன், கண்ணிவெடித் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டது என்பதால், அது முற்றிலுமாகச் சேதமுறவில்லை.

அதனால், வேனை கவிழ்த்த மாவோயிஸ்டுகள் உள்ளிருந்தவர்களைச் சுட்டுக் கொன்றனர் என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தகவல் கிடைத்ததும் சம்பவம் நடந்த இடத்துக்கு பொலிஸார் விரைந்தனர். வேனில் இருந்த யாராவது தப்பினார்களா என்ற விவரம் உறுதிசெய்யப்படவில்லை.

 
< முந்தைய   அடுத்த >