12. October 2008 03:30
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
14. August 2008 16:37
3. October 2008 18:45
15. August 2008 17:36
8. August 2008 18:51
4. October 2008 12:47
மத்திய_மாநில அரசுகளை கண்டித்து ராமேஸ்வரத்தில் ம.தி.மு.க. உண்ணாவிரதம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
17. July 2008 06:08
Vaiko 3.jpgதமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு தரத்தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ம.தி.மு.க. சார்பில் ராமேஸ்வரத்தில் 27_ந்தேதி உண்ணாவிரதம் நடைபெறும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:_

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் நமது கடல் எல்லையிலேயே தாக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் அன்றாட நிகழ்வாகிவிட்டது. நமது கடல் எல்லையிலேயே வந்து சிங்களக் கடற்படையினர் குருவிகளைச் சுடுவதுபோல் தமிழக மீனவர்கலைச் சுடுவதும்,

மீன்பிடி வலைகளை நாசப்படுத்துவதும் தொடர்ந்து நடைபெறுவதற்கு மத்திய அரசும், அதில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளும்தான் பொறுப்பு ஏற்க வேண்'டும்.

நமது கடல் எல்லையிலேயே சிங்களக் கடற்படையினர் கண்ணிவெடி அமைத்ததோடு, நமது மீனவர்கள் அப்பகுதிக்கு வந்தால் கொல்லப்படுவார்கள் என்று மிரட்டுகிற துணிச்சல் இலங்கைக் கடற்படையினருக்கு ஏற்பட்டதும், இந்தியாவை வெட்கித் தலைகுனிய வைக்கின்ற செயல் ஆகும். இலங்கை அரசு'டன் இந்திய அரசு செய்'துள்ள கூட்டுச் சதியின் விளைவுதான் இந்த நடவடிக்கை ஆகும்.

இலங்கையில் தமிழ் இனத்தைப் கூண்டோடு அழிக்கத் திட்டமிட்டு இனப்படுகொலை செய்து வரும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயுதம் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்வதால்தான் சிங்களக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது துணிச்சலாகத் தாக்குதல் நடத்துகின்றனர்.

இலங்கைக் கடற்படையினருக்கு 'ர்'மூழ்கிப் பயிற்சியும் இந்தியா தருவது தமிழக மீனவர்களுக்கும், தமிழ் இனத்துக்கும் இழைக்கப்படும் துரோகம் ஆகும்.

மத்திய அரசை எதிர்த்து மக்கள் சக்தியைத் திரட்ட வேண்டும் என்று முன்பே கூறியிருந்தேன். அதன் ஒருகட்டமாக, தமிழக மீனவர்களைப் படுக்கொலை செய்யும் இலங்கை கடற்படையைத் தடுக்கும் கடமையைச் செய்யாததுடன்,

சிங்கள அரசுக்கு துணைபோகும் துரோகத்தை செய்யும் மத்திய அரசைக் கண்டித்து ஜூலை 27_ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இராமேஸ்வரத்'தில் என்னுடைய தலைமையில் உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெறும்.

உண்ணாநிலை அறப்போராட்டத்தைப் பொருளாளர் மு.கண்ணப்பன் எம்.எல்.ஏ தொடங்கி வைப்பார். துணைப் பொதுச் செயலாளர் மல்லை சி.இ.சத்யா, மாவட்ட செய'லாளர் நென்மேனி ஜெயராமன் முன்'னிலை வகிக்'கி'றார்'கள்.இவ்வாறு வைகோ கூறி'யுள்'ளார்.
 

 
< முந்தைய   அடுத்த >