29. August 2008 19:57
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
8. August 2008 18:51
27. August 2008 15:01
21. August 2008 23:30
15. August 2008 17:36
14. August 2008 16:37
மீனவர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வருமா? ராமநாதபுரம் கலெக்டருடன் முதல்வர் பேச்சு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
17. July 2008 06:18

karunanidhi.jpgகாலவரையற்ற வேலைநிறுத்தம் துவங்கி 14 நாட்களுக்கு பின் மீனவர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டருடன் தொலைபேசியில் தமிழக முதல்வர் விவாதித்துள்ளார்.

இலங்கை கடற்படையினரின் தாக்குலில் இருந்து காப்பற்ற வேண்டும் தாங்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் கச்சத்தீவு பகுதியில் தொடர்ந்து மீன் பிடிக்க உரிமை பெற்றுத்தர வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஜூலை 3 ம்தேதியில் இருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீனவர்களின் வேலைநிறுத்தம் 14 வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

தமிழக முதல்வர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ராமேஸ்வரம் மீனவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து விவாதித் ததாகவும் மீனவர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மீனவர்களின் பிரச்னைகள் குறித்து முதல்வர் மிகுந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும் மீனவர்கள் சிரமமின்றி வாழ்க்கை நடத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
 

 
< முந்தைய   அடுத்த >