12. October 2008 03:21
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
29. September 2008 22:52
16. August 2008 15:10
8. August 2008 18:51
27. August 2008 15:01
14. August 2008 16:37
இந்திய தூதரக தாக்குதலில் பாக்.கிற்கு பங்கா? விசாரணை நடத்தப்படும் என்கிறது அமெரிக்கா அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
17. July 2008 06:40

afgan.jpgஆப்கானிஸ்தான் தலைநகர் காஞீலில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் பாக்.கிற்கு பங்கு உண்டு என்று ஆப்கான் அதிபர் ஹமீது கர்சாய் கூறியது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காஞீலில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது கடந்த வாரம் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 இந்தியர்கள் ஒரு அமெரிக்க ராணுவ அதிகாரி உள்பட மொத்தம் 58 பேர் பலியானார்கள்.

இந்த கோரச்சம்பவத்திற்கு பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.தான் காரணம் என்று இந்த தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.யின் பங்கு இருக்கிறது என்றும் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீது கர்சாய் குற்றம்சாட்டியிருந்தார்.

இது குறித்து அமெரிக்க ராணுவ அமைச்சர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கருத்கு கூறுகையில் _ இந்திய தூதரகம் தாக்கப்பட்ட சம்பவத்தில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.க்கு பங்கு இருப்பதற்கான சான்றுகள் எதுவும் எங்களுக்கு தெரியவில்லை என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் நேற்று வாஷிங்டனில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அந்த பேட்டியில் அவர் கூறுகையில் ;

இந்திய தூதரகம் தாக்கப்பட்டதில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக ஆப்கான் ஜனாதிபதி ஹமீது கர்சாய் குற்றம்சாட்டியிருப்பது குறித்த அடிப்படை ஆதாரம் குறித்து முதலில் நாங்கள் விசாரணை நடத்த இருக்கிறோம்.

என்றாலும் அவரது ஆட்சிக்கு நாங்கள் தொடர்ந்து உதவிகரமாக இருப்போம் என்றார்.

பாகிஸ்தானின் பல பகுதிகளில் இருக்கும் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானுக்குள் வந்து தாக்குதல் நடத்துகிறார்கள்.இது உண்மைதான்.

இது போன்ற நிகழ்வுகள் பாகிஸ்தானுக்கு மட்டும் தொந்தரவாக இல்லை, அமெரிக்காவுக்கும் தொல்லையாகத்தான் இருக்கிறது இதே போல ஆப்கானிஸ்தானுக்கும் தொல்லையாகத்தான் இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

ஜனநாயகத்திற்கு எதிரான வன்முறை நடவடிக்கைகளில் பயங்கரவாதிகள் ஈடுபடுகிறார்கள். அவர்களை நாம் எல்லோரும் ஒரு பொதுவான எதிரியாகத்தான் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பாகிஸ்தான் பகுதிகளில் அல் குவைதா தீவிரவாதிகள் உள்ளனர். அல் குவைதா தீவிரவாதிகளை ஒடுக்க நாங்கள் கடுமையாக போராடி வருகிறோம். அவர்களை நாங்கள் கடுமையாக தாக்கியும் வருகிறோம்.

பாகிஸ்தானில் உள்ள அல் குவைதா தீவிரவாதிகள் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள அல் குவைதா தீவிரவாதிகளையும் நாங்கள் தாக்கி வருகிறோம் என்றறும் அவர் கூறினார்.

அல் குவைதா தீவிரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தானுடன் இணைந்து நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்றும் ஜார்ஜ் புஷ் கூறினார்.
 

 
< முந்தைய   அடுத்த >