| இந்தியாவும் சீனாவும் பூமியை அச்சுறுத்துகின்றன-பில் கிளின்டன் |
|
|
| வா.கி.குமார் | |
| 17. July 2008 16:11 | |
|
இன்று இந்தப் பூமியை அச்சுறுத்தும் வகையில் மிகப்பெரிய ஆபத்தாக வளர்ந்து வரும் நாடுகளான இந்தியாவும், சீனாவுமே உள்ளதாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் தெரிவித்துள்ளார்.
இந்த இரு நாடுகளும் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டுமெனவும், அவ்வாறு இல்லாவிடின் இந்த இரு நாடுகளாலும் உலகம் அழியப் போவது உறுதியென்றும் அவர் கூறியுள்ளார். ஏ.பி.சி செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உலகின் சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் நச்சு வாயுக்களை வெளியிடுவதில் சீனாவே தற்போது முதலிடத்திலுள்ளதாகவும், சீனாவில் 10 நாட்களுக்கொரு புதிய அனல்மின் நிலையங்கள் உருவாகி வருவதாகவும் கிளின்டன் குறிப்பிட்டுள்ளார். இவையனைத்தும் நிலக்கரியை எரிபொருளாகப் பயன்படுத்துபவையெனக் குறிப்பிட்ட அவர், அவர்கள் எந்தக் கட்டுப்பாட்டுக்குள்ளும் வருவதாகத் தெரியவில்லையெனக் கூறினார். வளரும்; நாடுகளைப் பொறுத்தவரையில் வளர்ந்த நாடுகள் தங்களை இரண்டாம் நிலையில் வைத்திருப்பதாக ஒரு உணர்வு நிலவுவதாகவும், இந்தியாவும் அதே எண்ணத்திலேயே செயல்படுவதாகவும் கிளின்டன் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகவே இந்த இரு நாடுகளும் ஒருவித வெறியோடு, எதைப் பற்றியும் கவலைப்படாமல் தங்கள் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதிலேயே குறியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தங்கள் வளர்ச்சித் திட்டங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமெனவும், அவ்வாறு இல்லாவிடின் இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளுமே இந்தப் பூமியை எரித்துவிடும் அபாயமுள்ளதாகவும் கிளின்டன் கூறியுள்ளார. |
| < முந்தைய | அடுத்த > |
|---|







