29. August 2008 19:48
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
2. August 2008 23:48
15. August 2008 17:36
3. August 2008 21:01
21. August 2008 23:30
16. August 2008 15:10
விடுதலைக்காக போராடுபவர்களின் பக்கம்தான் அமெரிக்கா எப்போதும் இருக்கும் - புஷ் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
17. July 2008 20:37

bush.jpgவிடுதலைக்காக போராடுபவர்களின் பக்கம்தான் அமெரிக்கா எப்போதும் இருக்குமென சூளுரைத்துள்ளார்  அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த புஷ் மேலும் தெரிவிக்கையில்;

இவ்விடயம் தொடர்பாக நான் சீன ஜனாதிபதி ஹூ ஜிந்தாவோவிடமும் தெரிவித்துள்ளேன்.

சீனாவில் மத சுதந்திரம் கிடையாது. கம்யூனிஸ்ட் நாடு என்பதால் எந்த மதத்துக்கும் அரசு ஆதரவு கிடையாது. கிறிஸ்தவ மதம் வெளிப்படையாக செயல்படவில்லை.

அந்த நாட்டில் ஒரு அங்கமாக இருக்கும் திபெத்தில் தனி நாடுகோரி போராட்டம் வலுத்து உள்ளது. சீனாவில் உள்ள உயிகுர் முஸ்லிம்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு விடுதலை கோரி போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில் விடுதலைக்காக போராடும் இயக்கங்களுக்கு ஆதரவாக தான் நாங்கள் இருப்போம்.

கடந்த வாரம் ஜப்பானில் சீன ஜனாதிபதி ஹுஜிந்தாவை சந்தித்து பேசினேன். அப்போது அவரிடம் விடுதலைக்காக போராடுபவர்கள் இருக்கும் வரை அமெரிக்கா அவர்கள் பக்கம் தான் இருக்கும் என்று தெரிவித்தேன்.

தலாய் லாமாவின் தைரியத்தை நான் பாராட்டுகிறேன். திபெத்தில் வசிக்கும் பௌத்தர்கள் துணிச்சலுடன் போராடி வருகிறார்கள். சீனாவில் மத சுதந்திரத்துக்காக போராடுபவர்களை நாங்கள் இந்த நேரத்தில் நினைவு கூருகிறோம். அவர்களை கௌரவிக்கிறோம்.

உய்க்கூர் மாநிலத்தில் வசிக்கும் முஸ்லிம்களையும் நாங்கள் கௌரவிக்கிறோம். சீனாவில் பாதாள தேவாலயங்களில் நடக்கும் பிரார்த்தனைக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்களை சந்தித்துள்ளேன்.

துர்க்மெனிஸ்தான், வியட்நாம் ஆகிய நாடுகளில் கடந்த சில ஆண்டுகளில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. இந்தச் சுதந்திரத்தை பெறாமல் இன்னும் எத்தனையோ இலட்சக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள்.

எரித்திரியா, சூடான் ஆகிய நாடுகளில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள். வடகொரியாவில் மதவழிபாடு நடத்துபவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். இந்த நாடுகளின் தலைவர் மதசுதந்திரத்தை மதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். விருப்பமான கடவுளை வழிபட மக்களுக்கு உள்ள உரிமைகளை மதித்து நடக்கவேண்டுமெனத் தெரிவித்தார்.

 
< முந்தைய   அடுத்த >