| இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு இல்லை: சீனா |
|
|
| வா.கி.குமார் | |
| 18. July 2008 07:46 | |
|
அணுசக்தி பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாக வியன்னாவில் சர்வதேச அணுசக்தி ஏஜென்சி (ஐஏஇஏ) உறுப்பினர்களிடம் இந்தியா விளக்கம் அளிக்கும்போது சீனா தடையாக இருக்காது. இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து நிருபர்கள் வியாழக்கிழமை கேட்டபோது, சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் லியு ஜியான்சாவோ மேற்கண்டவாறு கூறினார். அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவும், அமெரிக்காவும் மேலும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளதை கவனித்து வருகிறோம் என அவர் மேலும் கூறினார். அணுசக்தியைப் பெற்றிருக்கும் 5 நாடுகளில் ஒன்றான சீனா, சர்வதேச அணுசக்தி ஏஜென்சி மற்றும் அணுசக்தி எரிபொருள் வழங்கும் நாடுகள் குழுவில் முக்கிய அங்கம் வகிக்கிறது. |
| < முந்தைய | அடுத்த > |
|---|








