29. August 2008 19:39
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
21. August 2008 23:30
3. August 2008 21:01
27. August 2008 15:01
14. August 2008 16:37
19. August 2008 23:28
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து தமிழகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
18. July 2008 13:26
fisherman.jpgதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அடிக்கடி துப்பாக்கிச்சூடு நடத்துவதை கண்டித்து தி.மு.க. சார்பில் நாளை சனிக்கிழமை தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.

சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதத்தை தமிழக முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான கருணாநிதி ஆரம்பித்துவைக்கவுள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் விருந்தினர் இல்லம் அருகே இந்த உண்ணாவிரதம் நடைபெறுகிறது.

இராமேஸ்வரத்தில் நடைபெறும் உண்ணாவிரதத்திற்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். மதுரை உண்ணாவிரதத்தில் மு.க. அழகிரியும், நாகப்பட்டினத்தில் நடைபெறும் உண்ணாவிரத்தில் கனிமொழியும் கலந்துகொள்கின்றனர்.

நேற்றையதினம் நடைபெற்ற திராவிட முன்னேற்றக்கழகத்தின் உயர்குழுக் கூட்டத்திலேயே உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்டது. அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவிருக்கும் தெற்காசிய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ளும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுகின்றமை குறித்து இலங்கைத் தரப்பினருடன் கலந்துரையாடவேண்டுமெனவும் தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.

இன்னொரு தீர்மானம் தமிழக மீனவர்களுக்கு இந்திய கடற்படையும் கடலோரப்படையும் இணைந்து பாதுகாப்பளிக்க வேண்டும் எனவும் தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது. முதல்வர் கருணாநிதி கடல் எல்லையை மீறுகின்ற தமிழக மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதை இலங்கை கடற்படை தவிர்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் சுமார் 250க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக இந்தியச் செய்திகள் கூறுகின்றன.

இதேநேரம், மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படுகின்றமையைக் கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் மேற்கொண்டுவந்த வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

 

 
< முந்தைய   அடுத்த >