| விடத்தல்தீவுக்கு வீட்டுப்பொருட்களை ஏற்றிவரச் சென்றவர்களைக் காணவில்லையென முறைப்பாடு |
|
|
| வா.கி.குமார் | |
| 18. July 2008 16:22 | |
மன்னார் விடத்தல்தீவு பகுதியில் இருந்து இடம்பெயர்ந்துள்ளவர்களின் வீட்டுப் பொருட்களையும், உடைமைகளையும் ஏற்றி வருவதற்காக அங்கு சென்ற நான்கு பேர் காணாமல் போயிருப்பதாக கிளிநொச்சி பிராந்திய பார ஊர்திகள் கூட்டுறவுச் சங்கத்தின் பொது முகாமையாளர் எஸ.ரெட்ணாகரன் முறையிட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.
கிளிநொச்சி தர்மபுரம் 10 ஆம் யுனிட்டைச் சேர்ந்த இராமச்சந்திரன் தமிழ்வாணன் (29), விவேகானந்தா நகரைச் சேர்ந்த கணபதி ஞானசீலன் (29), வெள்ளாங்குளம் கணேசபுரத்தைச் சேர்ந்த மரிசான்பிள்ளை எழில்வேந்தன் (25), இரத்தினபுரத்தைச் சேர்ந்த நடராஜா சிறிசாயிதரன் (22) ஆகியோரே காணாமல் போயிருப்பதாக முறையிடப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை இவர்கள் விடத்தல்தீவிலிருந்து இடம்பெயர்ந்த உறவினர்களின் வீட்டுப்பொருட்களையும், உடைமைகளையும் ஏற்றிவரச் சென்றதாகவும், அதன் பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை எனவும் தம்மிடம் முறையிடப்பட்டிருப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார். காணாமல் போயிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள இந்த நால்வரும் விடத்தல்தீவு பகுதிக்குச் சென்ற வேளையிலேயே இராணுவத்தினர் விடத்தல்தீவு பகுதியை விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது, |
| < முந்தைய | அடுத்த > |
|---|