| கோதாபய ராஜபக்ஷவை பாராளுமன்றத்திற்கு கொண்டுவருவதற்கு தீவிர முயற்சி |
|
|
| வா.கி.குமார் | |
| 18. July 2008 16:39 | |
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவை பாராளுமன்ற உறுப்பினராக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜே.வி.பி.தேசியப்பட்டியல் எம்.பி.யான வசந்த சமரசிங்க தனது எம்.பி.பதவியை ராஜிநாமா செய்ததன் மூலம் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கே கோதாபயவை நியமிக்க இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மற்றும் சட்டத்தரணி கோமின் தயாசிறி உட்பட்டவர்களே ஜனாதிபதியிடம் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர். அத்துடன், கோதாபய ராஜபக்ஷவை எம்.பி.யாக்குவதன் மூலம் அவருக்கு பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொது மக்கள் பாதுகாப்புக்கான அமைச்சர் பதவியை வழங்கலாமென்று இவர்கள் தெரிவித்துள்ளனர். யுத்தம் மிகவும் தீவிரமான கட்டத்திற்குள் சென்றுள்ள நிலையில் பாராளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரது பிரசன்னம் மிகவும் அத்தியாவசியமென்றும் இவர்கள் கூறியுள்ளனர். இதேவேளை, வசந்த சமரசிங்கவின் இடத்திற்கு ஜே.வி.பி.யின் மத்தியகுழு உறுப்பினர் சுஜித்குருவிற்றவை நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவை ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கோரியுள்ளார். இதற்கிடையில் இந்த வெற்றிடத்திற்கு, காலஞ்சென்ற அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் மனைவி டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளேயை நியமிக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கட்டான பிரிவினர் ஜனாதிபதியைக் கோரியுள்ளனர்.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|




பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவை பாராளுமன்ற உறுப்பினராக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



