| ஐ.நா.வின் மனித உரிமைகள் சபையின் பணிப்பாளராக தமிழ் பெண் |
|
|
| வா.கி.குமார் | |
| 18. July 2008 20:55 | |
தென்னாபிரிக்காவை சேர்ந்த தமிழ் பெண்னான குற்றவியல் நீதிபதி ஒருவர் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் பணிப்பாளராக செயலாளர் நாயகம் பான் கீ மூனால் பரிந்துரைசெய்யப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது
1941ஆம் ஆண் தென்னாபிரிக்காவில் பிறந்த தமிழரான திருமதி நவநீதன் பிள்ளை என்பவரே இவ்வாறு பரிந்துரைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் 1967ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் நாட்டால் மாநிலத்தில் முதலாவது பெண் சட்டத்தரணியாக பணியாற்றினார். குற்றவியல் சட்டத்துறையில் கலாநிதி பட்டம் பெற்றுள்ள இவர்,2003ஆம் ஆண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாகவும் கடமையாற்றியுள்ளார். ருவாண்டாவில் இடம்பெற்ற இனப்படுகொலை விசாரணையின்போது பாலியல்வல்லுறவு என்பது இனப்படுகொலைசெய்வதற்கான முக்கிய ஆயுதம் என்றும் அது ஒரு இனப்படுகொலை குற்றமே எனவும் வரலாற்று முக்கியத்துவமிக்க தீர்ப்பை வழங்கினார். |
| < முந்தைய | அடுத்த > |
|---|