| பருத்தித்துறை பகுதியில் தொடரும் கொலை – முதியவரின் சடலம் எரிந்த நிலையில் மீட்பு |
|
|
| வா.கி.குமார் | |
| 18. July 2008 21:18 | |
|
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை வயோதிபர் ஒருவர் அடித்துக்கொலைசெய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை மாலை 6மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பருத்தித்துறை தம்பசெட்டி பிரதேசத்தை சேர்ந்த ஆறுமுகம் தங்கவடிவேல்(63வயது) என அடையாளங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது சடலம் மந்திகை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணை இடம்பெற்றுவருவதாகவும் மந்திகை பொலிஸார் தெரிவித்தனர். பருத்தித்துறை பகுதியில் இதுபோன்று அண்மைக்காலத்தில் நால்வர் கொலைசெய்யப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக மக்கள் அச்சத்தின் மத்தியில் வாழ்ந்துவருதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| < முந்தைய | அடுத்த > |
|---|









