| ஆசியக் கிண்ண கனிஷ்ட ஹொக்கித் தொடர்: கிண்ணத்தை தக்கவைத்தது இந்தியா. |
|
|
| PTR. | |
| 19. July 2008 05:46 | |
இந்தியாவின் ஹைதராபாத் நகரில் நடைபெற்று வந்த 6வது ஆசியக் கிண்ண கனிஷ்ட ஹொக்கி போட்டித் தொடரில், நேற்று இடம்பெற்ற இறுதியாட்டத்தில் தென்கொரியாவைத் தோற்கடித்து இந்தியா மீண்டும் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது. ஆசியக் கிண்ண கனிஷ்ட ஹொக்கி போட்டியில் இந்தியா பெறும் இராண்டாவது கிண்ணம் இதுவாகும்.
ஹைதராபாதில் நேற்று மாலை ஆரம்பித்த இந்த இறுதியாட்டத்தில் ஆட்ட நேர முடிவு வரை இரண்டு அணிகளும் தல 2 கோல்களைப் போட்டு சமநிலையில் இருந்தன. எனினும், போட்டியின் இறுதி முடிவைக் காணும் பொருட்டு வழங்கப்பட்ட மேலதிக நேரத்தில், இந்தியாவின் திவாகர் ராம் கோலடித்து, இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இறுதியில் இந்தியா 3:2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இதனிடையே, இந்திய அணி நேற்றைய ஆட்டத்தில் இலகுவாக வெற்றி பெறும் என்று கூறப்பட்டாலும் தென்கொரிய வீரர்களின் ஆக்ரோசமான ஆட்டம், இந்திய வீரர்களை திக்குமுக்காடச் செய்யது. ஒருவரும் எதிர்பாக்காத வகையில் அவர்கள் 2 கோல்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. தென்கொரிய வீரர்களின் ஆட்ட நுணுக்கங்கள் சர்வதேசத்தரத்துடன் ஒப்பிடக்கூடியவையாக இருந்தன. முன்னாதாக நடைபெற்ற 3ஆம் இடத்துக்கான ஆட்டத்தில் பாகிஸ்தான் 7:2 என்ற கணக்கில் ஜப்பானை மிக இலகுவாகத் தோற்கடித்தது. இந்திய அணியுடன் அரையிறுதியில் விளையாடிய, பாகிஸ்தான் அந்தப் போட்டியில் 3:1 என்ற கணக்கில் தோல்வியடைந்திருந்தது. குறித்த ஆட்டத்தில் இந்திய, பாகிஸ்தானிய வீரர்களுக்கிடையில் கைகலப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. |
| < முந்தைய | அடுத்த > |
|---|