|
தமிழீழத்தில் தொடரும் இடம்பெயர்வு அவலம் |
|
|
|
வா.கி.குமார்
|
|
19. July 2008 19:10 |
|
மன்னார் மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பகுதிகளை நோக்கி படையினர் மேற்கொண்டுவரும் எறிகணைத்தாக்குதல் மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதல் காரணமாக இதுவரை 7000 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ள மக்கள் கிளிநொச்சி பகுதியில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாந்தை கிழக்கு பிரதேசங்களில் உள்ள 17கிராமசேவகர் பிரிவுகளை சேர்ந்தவர்களும் துணுக்காய் பிரதேசங்களில் உள்ள 19 கிராமசேவகர் பிரிவுகளையும் சேர்ந்த சுமார் 7000 குடும்பங்களே இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடம்பெயர்வில் துணுக்காய் பகுதிகளில் படையினரின் எறிகணைத்தாக்குதல் காரணமாக இடம்பெயர்ந்து தங்கியிருந்த 600குடும்பங்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாற இடம்பெயர்ந்துள்ள மக்கள் கிளிநொச்சி மாவட்டத்தின் ஸ்கந்தபுரம்,அக்கராயன்,வன்னேரி போன்ற பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
|