| குடா நாட்டிலிருந்து போக்குவரத்து இரு வாரத்துக்கு நிறுத்தம்? |
|
|
| வா.கி.குமார் | |
| 19. July 2008 19:27 | |
"சார்க்' மாநாட்டை முன்னிட்டு யாழ். குடா நாட்டுக்கும் வெளியிடங்களுக்குமான போக்குவரத்துகள் சுமார் இரு வாரங்களுக்கு நிறுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சார்க் மாநாட்டின் பாதுகாப்புக்காக கொழும்பு மாநகருக்குள் பாதுகாப்பு கெடுபிடிகள் உச்சக் கட்டத்தை அடைந்து வரும் நிலையில் வடபகுதிக்கும் தென்பகுதிக்குமிடையேயான போக்குவரத்துகளை குறிப்பிட்ட நாட்களுக்கு இடை நிறுத்துவது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதனொரு கட்டமாக யாழ். குடாவுக்கும் கொழும்புக்குமிடையிலான விமானப் போக்குவரத்து எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 4 ஆம் திகதி வரை இடை நிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி காலப் பகுதியில் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்குமிடையே விமானப் பயணம் செய்வதற்காக பயணச் சீட்டுகளைப் பெறுவதற்காக நேற்று வெள்ளிக்கிழமை இந்த விமான சேவையில் ஈடுபடும் நிறுவனங்களுக்குச் சென்றவர்களுக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரை விமானப் போக்குவரத்துகள் நடைபெறாதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலப் பகுதியில் யாழ்ப்பாணத்திற்கும் திருகோணமலைக்குமிடையில் பயணிகள் கப்பல் சேவையும் நடைபெறாதெனவும் கூறப்படுகிறது.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|





"சார்க்' மாநாட்டை முன்னிட்டு யாழ். குடா நாட்டுக்கும் வெளியிடங்களுக்குமான போக்குவரத்துகள் சுமார் இரு வாரங்களுக்கு நிறுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

