12. October 2008 03:27
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
27. August 2008 15:01
15. August 2008 17:36
29. September 2008 22:52
8. August 2008 18:51
14. August 2008 16:37
நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவு திரட்ட ஆளும், எதிர்க்கட்சிகள் போட்டி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
19. July 2008 19:42

manmohn_sink.jpgஇந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் எதிர்வரும் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திக்கவுள்ளநிலையில், ஆளும் கூட்டணிக் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் தமக்கு ஆதரவு திரட்டுவதில் தீவிரம் காட்டியியுள்ளன.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியானது பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்கு பல சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளதாகவும்,  கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சியிலுள்ள சிலரே போர் கொடி தூக்கியிருப்பது இதற்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பதாகவும் இந்தியத் தவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் தொடர்ச்சியாக ஹரியாணா மற்றும் கர்நாடகத்தில் சில காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சிக்கு எதிராக செயல்பட முடிவு செய்துள்ளதாகத் தெரியவருகிறது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசுக்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக சமாஜவாதி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முனாவர் ஹசன் தெரிவித்துள்ளார்.

எனினும், நேற்றையதினம் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் நடத்திய கூட்டத்தில் 39 உறுப்பினர்களில் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே கலந்துகொண்டிருந்தனர்.
 
மேலும் ஆளும் கூட்டணியிலுள்ள இன்னொரு கட்சியான 5 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஜே.எம்.எம். கட்சி, மத்திய அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமாயின், கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு, பின்னர் விடுதலையான அந்தக்கட்சியின் தலைவர் சிபுசோரனுக்கு மீண்டும் அமைச்சரவை அமைச்சர் பதவி தரவேண்டுமென்பதுடன்,  அந்தக்கட்சியைச் சேர்ந்த இன்னொருவருக்கு இணையமைச்சர் பதவி தரவேண்டுமெனவும் நிபந்தனை முன்வைத்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

இன்னொருபுறம், மூன்று எம்.பி.க்களைக் கொண்ட அஜீத் சிங்கின் ஆர்.எல்.டி. கட்சியும், மத்திய அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க நிபந்தனை விதித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இது இவ்வாறிருக்க மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்கள் இருவர் தலைமைப் பீடத்துக்கு எதிராக, ஆளும் மத்திய அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

எனினும், இவர்கள் ஆளும் மத்திய அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிக்காவிட்டால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்தியா மற்றும் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, இது மிகவும் பிரசோயசனமானதெனவும் கூறினார்.

அத்துடன் அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளர்.

 

 
< முந்தைய   அடுத்த >