29. August 2008 19:50
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
8. August 2008 18:51
2. August 2008 23:48
16. August 2008 15:10
19. August 2008 23:28
3. August 2008 15:57
சிங்கள அரசின் கொலைகள் தொடர்பில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் - மதுரை ஆதினம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
19. July 2008 19:52
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் பிரச்னையில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரையில் திமுக சார்பில் சனிக்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.

உண்ணாவிரதத்தை மு.க. அழகிரியின் மகள் கயல்விழி தொடங்கிவைத்து, தலைமை வகித்தார்.

சென்னையிலிருந்து காலை விமானம் மூலம் மதுரை வந்த கயல்விழி, போலீஸ் பாதுகாப்புடன் உண்ணாவிரதம் நடைபெற்ற மேலமாசி - வடக்குமாசி சந்திப்பு பகுதிக்கு வந்தார்.

உண்ணாவிரதத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆ. தமிழரசி, மேயர் கோ.தேன்மொழி, துணை மேயர் பி.எம். மன்னன், திமுக மாவட்டச் செயலர் வேலுச்சாமி, முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் கெüஸ்பாஷா, மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மதுரை ஆதீனம்:

உண்ணாவிரதப் பந்தலுக்கு மதுரை ஆதீனம் வந்தார். கயல்விழிக்கு சால்வை அணிவித்து, திருநீறு பூசி ஆசி வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், "இலங்கை கடற்படையினர் கடந்த பல ஆண்டுகளாக இதுபோன்று, கொலைச் செயல்களை நிகழ்த்தி வருகின்றனர். ஈழத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் திமுகதான் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.

சிங்கள அரசின் கொலைத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு கடுமையான நிலைப்பாட்டை விரைவில் எடுக்கவேண்டும் என்றார்.

நிருபர், விடியோகிராபர் மீது தாக்குதல்:

உண்ணாவிரதம் குறித்து ஜெயா டி.வி. நிருபர் முருகன், விடியோகிராபர் குமார் செய்தி சேகரித்தனர். அப்போது அவர்களை திமுகவைச் சேர்ந்த சிலர் தாக்கி, கேமராவை உடைத்தனர்.

இது தொடர்பாக திலகர்திடல் போலீஸில் புகார் செய்யப்பட்டது. புகாரை போலீஸôர் பெற மறுத்துவிட்டனர். இதனால், பதிவுத் தபால் மூலம் டி.ஜி.பி., மதுரை போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தால் உண்ணாவிரதப் பந்தலில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. உண்ணாவிரதம் மாலை 5 மணிவரை நடைபெற்றது.

உண்ணாவிரதத்தையொட்டி அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

 
< முந்தைய   அடுத்த >