| மனித எலும்புக்கூடுகளின் எச்சங்கள் மரபணு சோதனைக்காக கொழும்புக்கு அனுப்பிவைப்பு |
|
|
| வா.கி.குமார் | |
| 19. July 2008 20:32 | |
மட்டக்களப்பு பாலமீன்மடு மனிதப் புதைகுழியிலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட 21 மனித எலும்புக்கூடுகளின் எச்சங்கள் மரபணு (டி.என்.ஏ.) பரி சோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.
பாலமீன்மடு பகுதியில் கடந்த திங்கட்கிழமை கிணறு தோண்டக் குழி வெட்டிய போது எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்படவே புதன்கிழமை மாவட்ட நீதிபதி முன்னிலையில் புதைகுழி தோண்டப்பட்டது. இதன் போது புதைகுழிக்குள்ளிருந்து 21 எலும்புக்கூடுகளுக்குரிய பாகங்கள் எச்சங்களாக மீட்கப்பட்டு மட்டக்களப்பு சட்டவைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டன. இவற்றுடன், புதைகுழி மண்ணும், ஆண்கள், பெண்களது ஆடைகளும் துப்பாக்கி வெற்று ரவைகள் சிலவும் கைப்பற்றப்பட்டு அவையும் கவனமாகப் பொதி செய்யப்பட்டு பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புக்கூடுகளுக்குரியவர்கள் யார் இவர்களது மரணங்களுக்கான காரணம் என்ன என்பது குறித்து கண்டறிய ஆய்வு கூட பரிசோதனைகளும் மரபணு பரிசோதனையும் கொழும்பில் மேற்கொள்ளப்படவுள்ளது. கடந்த 3 முதல் 4 வருடங்களுக்கிடையில் இந்த 21 உடல்களும் மேற்படி புதைகுழிக்குள் புதைக்கப்பட்டிருக்கலாமெனக்கருதப்படுகிறது. இது குறித்து உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் இதற்கு ஐ.நா.உதவ வேண்டுமெனவும் மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|





மட்டக்களப்பு பாலமீன்மடு மனிதப் புதைகுழியிலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட 21 மனித எலும்புக்கூடுகளின் எச்சங்கள் மரபணு (டி.என்.ஏ.) பரி சோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.




