20. August 2008 20:25
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
3. August 2008 15:57
2. August 2008 23:48
8. August 2008 18:51
31. July 2008 18:12
27. July 2008 09:43
மீனவ படகுகள் மீதே இன்று விமானத் தாக்குதல் - புலிகள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
19. July 2008 20:40
f16.jpgமுல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் வழமைபோல கடலில் கரைவலை மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் படகுகள் மீது இன்று காலை 6.30 மணியளவில் விமானப் படையின் கிபிர் தாக்குல் விமானங்கள் நடத்திய விமானக் குண்டு வீச்சுத் தாக்குதலில் மீனவர் ஒருவர் காயமடைந்ததாகவும் மீனவர்களின் நான்கு படகுகள் சேதமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் அப்பகுதியில் உள்ள நான்கு வீடுகளும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் கஜமோகன் என்ற 25 வயதுடைய மீனவரே தலையில் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து குண்டு வீச்சு விமானங்கள் ஒரே தடவையில் பறந்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்களை மேற்கோள் காட்டி விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான குண்டு வீச்சுத் தாக்குதல்கள் கடற்படையின் தாக்குதல் என்பவற்றினால் ஆழ்கடல் மீன்பிடி தொழில் முற்றாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இன்றைய தாக்குதல்களின் மூலம் கரைவலை மீன்பிடி தொழிலில் முல்லைத்தீவு மீனவர்கள் ஈடுபட முடியாத நிலை உருவாகியிருப்பதாகவும் மீனவர்கள் கூறியுள்ளனர்.

எனினும், முல்லைத்தீவுக்கு மேற்கே 2 கிலோ மீற்றர் தொலைவில் முல்லைத்தீவு குடாக் கடலில் இன்று காலை 6.10 மணிக்கும் 6.20 மணிக்கும் அடுத்தடுத்து விமானப்படையின் தாக்குதல் விமானங்கள் விடுதலைப் புலிகளின் 3 படகுகள் மீது தாக்குதல் நடத்தியதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆயுதங்கள் ஏற்ற பயன்படுத்தப்படும் விடுதலைப் புலிகளின் 2 படகுகள் இந்தத் தாக்குதலில் முற்றாக சேதமடைந்ததாகவும், மற்றுமொரு படகு நீண்ட நேரம் தீப்பற்றி எரிந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

 
< முந்தைய   அடுத்த >