29. August 2008 19:22
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
15. August 2008 17:36
27. August 2008 15:01
19. August 2008 23:28
3. August 2008 21:01
21. August 2008 23:30
எம்.பி.க்களுக்கு ரூ.25 கோடி லஞ்சம் குற்றச்சாட்டை பரதன் நிரூபிக்க வேண்டும்: லாலு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
20. July 2008 06:09

lalu.jpgநம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களிப்பதற்காக எம்.பி.க்களுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ரூ.25 கோடி கொடுப்பதாக ஏ.பி.பரதன் கூறியதை அவர் நிரூபிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறினார்.

புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் நாடாளுமன்றக் குழு கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் லாலு பிரசாத் யாதவ் கூறியதாவது:

இத்தகைய குற்றச்சாட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலர் ஏ.பி.பரதன் கூறியதை அவர் நிரூபிக்க வேண்டும். நிரூபிக்க முடியவில்லை எனில் மன்னிப்பு கேட்க வேண்டும்.

எல்லா கட்சிகளின் மதிப்பையும், எம்.பி.க்களின் மதிப்பையும் பரதன் குலைத்துவிட்டார். இதற்காக நாடு அவரை மன்னிக்காது.

நாடாளுமன்ற ஜனநாயகத்தையே அவர் அவமதித்துவிட்டார். ஜனநாயகத்தின் அடிப்படையையே தகர்ப்பதற்கான சதிதான் அவரது குற்றச்சாட்டு.

291 எம்.பி.க்களின் ஆதரவு அரசுக்கு உள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும். ஒரு எம்.பி. அல்லது 2 எம்.பி.க்களை உடைய சிறிய கட்சிகளுக்கு இது யோக காலம்.

எல்.கே.அத்வானியும், உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதியும் ஒரு நாளும் பிரதமராக முடியாது. எனக்கு கூடத்தான் பிரதமராக ஆசையுள்ளது. ஆனால் முடியுமா எனக் கேள்வி எழுப்பினார் லாலு பிரசாத் யாதவ்.

 
< முந்தைய   அடுத்த >