28. August 2008 08:26
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
16. August 2008 15:10
21. August 2008 23:30
15. August 2008 17:36
8. August 2008 18:51
3. August 2008 15:57
சோனியா விருந்து திடீர் ரத்து அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
20. July 2008 06:23

sonia.jpgஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சனிக்கிழமை இரவு அளிப்பதாக இருந்த விருந்து நிகழ்ச்சி கடைசி நிமிஷத்தில் ரத்து செய்யப்பட்டது.

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் தில்லிக்கு வரமுடியாத நிலையில் இருப்பதால் விருந்து ரத்து செய்யப்பட்டதாகக் காரணம் கூறப்பட்டது.

விருந்துக்கு 230-க்கு மேல் எம்.பி.க்கள் வரமாட்டார்கள் என்று கடைசி நிமிஷத்தில் தெரிந்ததால், அது தங்களுக்குப் பெரும்பான்மை கிடைக்காது என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக விருந்து ரத்து செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.

ஜே.எம்.எம்., மதச்சார்பற்ற ஜனதா தளம்:

சிபு சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியும், தேவ கெüடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளமும் தங்களுடைய நிலை என்ன என்பதை ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்திவிட்டு பிறகு அறிவிப்பதாகக் கூறியுள்ளன. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆதரித்து வாக்களிக்கும் என்று அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் தேக்லால் மாதோ அறிவித்திருக்கிறார். அக்கட்சிக்கு 5 உறுப்பினர்கள் உள்ளனர்.

தேவ கெüடா கட்சிக்கு 3 உறுப்பினர்கள் உள்ளனர். "இன்றைக்கே (சனி) முடிவு செய்யலாமே, நாளை வரை ஏன் ஒத்திப்போடுகிறீர்கள் -பேரம் பேசுவதற்காகவா?' என்று நிருபர்கள் கேட்டபோது, "பிரதமர் பதவியையே தூக்கி எறிந்தவன் நான், ஆதாயத்துக்காக அரசியல் நடத்தவில்லை' என்று பதில் அளித்தார் தேவ கெüடா.

காங்கிரஸ், எம்.பி.க்களின் கலக்கம்:

 மக்களவைத் தொகுதிகளை நாடு முழுக்க திருத்தியமைத்திருக்கிறார்கள். இதனால் அடுத்த தேர்தலில் பழைய தொகுதி கிடைக்காது என்றோ, போட்டியிடவே வாய்ப்பு தரமாட்டார்கள் என்றோ அஞ்சும் காங்கிரஸ் எம்.பி.க்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இருப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.

மேலும் உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி இப்போது பெரிய சக்தியாக உருவெடுத்துவருகிறார். அவருடைய ஆதரவு கிடைக்கும் என்பது உறுதியாகிவிட்டால் சொந்தக் கட்சியையே எதிர்த்து வாக்களிப்பதால் நஷ்டம் ஏதும் இல்லை என்று சில எம்.பி.க்கள் நினைப்பதாகவும் தெரிகிறது.

பாஜகவிலும் இதே அச்சம்:

 உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், குஜராத் போன்ற மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகள் பல மாறிவிட்டன. எனவே மீண்டும் தங்களால் எம்.பி.யாகத் தேர்வு பெற முடியாது என்று அஞ்சும் பாஜக எம்.பி.க்கள் பலர் வாக்களிக்காமல் ஒதுங்கிவிடவும், அதை முன்கூட்டியே காங்கிரஸ் தலைமைக்குத் தெரிவித்து ஆதாயம் தேடவும் முற்படுவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியும் எதையும் திட்டவட்டமாகக் கூறும் நிலையில் இல்லை.

அகாலி தள எம்.பி.க்களுக்கு நெருக்கடி: சிரோமணி அகாலிதளம் கட்சிக்கு வெளிநாடு வாழ் சீக்கியர்களிடமிருந்துதான் கணிசமான தேர்தல் நிதி வருகிறது. அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுக்கு வழிவகுக்கும் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை எதிர்க்க வேண்டாம் என்று அவர்கள் சிரோமணி அகாலிதளத்துக்கு நெருக்குதல் தர ஆரம்பித்துள்ளனர்.

அதைவிட முக்கியம், நாட்டில் முதல் முறையாக சீக்கியர் ஒருவர் பிரதமர் பதவிக்கு வந்திருக்கிறார். அவரை நாமே தோற்கடிக்க வேண்டாம் என்ற இனப்பற்றும் அவர்களிடம் காணப்படுகிறது. எனவே நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராகக் "கொறடா' உத்தரவு பிறப்பித்திருந்தாலும், கடைசி நேரத்தில் சில எம்.பி.க்கள் வாக்களிக்காமலே இருந்துவிடுவார்கள் என்று தெரிகிறது.

சிவசேனை நிலை என்ன?

 ஹிந்துத்துவக் கொள்கையில் பாரதிய ஜனதாவைவிட சிவசேனை தீவிரமாக இருந்தாலும் அரசியல் பேரங்களில் மற்ற கட்சிகளுக்கு சிவசேனை சளைத்ததல்ல. தபோல் மின்சார நிறுவனம் மகாராஷ்டிரத்தில் திட்டத்தைத் தொடங்குவதற்கு முதலில் கடும் எதிர்ப்பு தெரிவித்துவிட்டு பிறகு "நன்கொடை' வாங்கிக்கொண்டு அனுமதித்த கட்சிதான் சிவசேனை.

அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாட்டுக்குப் பிறகு பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் இந்தியாவில், குறிப்பாக மகாராஷ்டிரத்தில் தொழில்தொடங்கினால் தங்களுக்கு ஆதாயம் அதிகம் என்பதால் சிவசேனையும் மறைமுகமாக இந்த அரசு பிழைப்பதையே ஆதரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாமகவும் நிலைமாறும்?

காங்கிரஸ் கூட்டணியிலேயே தொடருகிறோம், அந்த அரசுக்கே ஆதரவு என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தாலும், கடைசி நேரத்தில் அக்கட்சியிலும் மனமாற்றம் ஏற்படலாம் என்ற பேச்சும் தில்லி வட்டாரங்களில் அடிபடுகிறது. அதற்குக் காரணம் தொடர்ந்து திமுக தலைமை காட்டும் பகைமைதான் என்று பேசப்படுகிறது.

 
< முந்தைய   அடுத்த >