| மீனவர் மீதான தாக்குதலை தடுக்கவேண்டும்: இலங்கைத் தூதரிடம் இந்தியா கண்டிப்பு |
|
|
| வா.கி.குமார் | |
| 20. July 2008 06:36 | |
|
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க உடனடி நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என இலங்கைத் தூதரிடம் இந் திய வெளியுறவுத் துறை துணைச் செயலர் கண்டிப்புடன் கேட்டுக் கொண்டார். கடலில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் இருவரை இலங்கை கடற்படையினர் கடந்த 12-ம் தேதி சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தை திமுக சனிக்கிழமை நடத்தியது. முன்னதாக, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியிருந்தார். தூதர் வரவழைக்கப்பட்டார்... இந்நிலையில் இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் சி.ஆர்.ஜெயசிங்கே, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு சனிக்கிழமை வரவழைக்கப்பட்டார். அவரிடம் இந்திய வெளியுறவுத் துறை துணைச் செயலர் ரவி பேசினார். அப்போது, மீனவர்கள் மீதான தாக்குதலை உடனடியாக இலங்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடிக்கும் வகையில் அமைதியான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். மீனவர்கள் கொல்லப்பட்ட வழக்கு விசாரணையில் இந்தியாவுக்கு இலங்கை ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுகொண்டார். |
| < முந்தைய | அடுத்த > |
|---|










