20. August 2008 20:23
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
8. August 2008 18:51
3. August 2008 21:01
15. August 2008 17:36
30. July 2008 06:43
2. August 2008 23:48
இங்கிலிஷ் பிரீமியர் லீக்கின் ‘இருபதுக்கு-20’ 2010இல் ஆரம்பம். அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
PTR.   
20. July 2008 06:39
eng_t20_sample.jpgஇங்கிலிஷ் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டிகள் 2010ஆம் ஆண்டு ஆரம்பமாகும் என்று இங்கிலாந்து-வேல்ஸ் கிரிக்கட் சபை அறிவித்துள்ளது. இங்கிலாந்தின் 18 பிராந்திய அணிகளுடன், வெளிநாட்டு பிராந்திய அணிகள் 2 இணைக்கப்பட்டு மொத்தமாக 20 அணிகளுடன் போட்டிகள் நடைபெறும்.

20 அணிகளையும் 10 அணிகள் கொண்ட இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகள் ஜூன் மாதத்தில் நடைபெறும் என்று தெரிகிறது. அதேபோல் ஜூலை, ஒகஸ்ட் மாதங்களில், 18 இங்கிலாந்து பிராந்திய அணிகளுக்குமிடையேயான தனித்த இருபதுக்கு-20 போட்டிகள் வெள்ளிக்கிழமை இரவுகளில் நடத்தப்படவுள்ளன.

இதில், இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும் இரண்டு அணிகள் வெற்றிக் கிண்ண லீக் இருபதுக்கு-20 கிரிக்கட் போட்டிகளில் பங்குபற்றும். இந்தப் போட்டிகளுக்காக சமீபத்தில் இங்கிலாந்து உள்நாட்டு கிரிக்கட் போட்டிகளில் அறிமுகம் செய்யப்பட்ட 40 ஓவர் கிரிக்கட் போட்டி இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இங்கிலிஷ் பிரிமியர் லீக் மற்றும் உள்நாட்டு இருபதுக்கு-20 போட்டிகளுக்காக ஏற்கனவே இங்கிலாந்து கிரிக்கட் சபை விளம்பர நிறுவனங்களிடமிருந்தும் போட்டி ஒளிபரப்பாளர்களிடமிருந்தும் ஆதரவுகள் பெருகிவருவதாகக் கூறப்படுகிறது. இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் பங்கேற்கும் 2 அயல் நாட்டு அணிகள் இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. ஆயினும், இந்தியாவின் ராஜஸ்தான் ரோயல்ஸ் இதில் ஒரு அணியாக இருக்கலாமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 
< முந்தைய   அடுத்த >