| இலங்கையின் துடுப்பாட்டக்காரர்களுக்கு இஷாந்த் ஷர்மா நெருக்கடி தருவார்: வாஸ். |
|
|
| PTR. | |
| 20. July 2008 07:15 | |
இலங்கை-இந்தியா டெஸ்ட் கிரிக்கட் தொடரில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, இலங்கை அணியின் துடுப்பாட்டக்காரர்களுக்கு நெருக்கடி வழங்குவார் என்று இலங்கையின் சிரேஷ்ட வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் தெரிவித்துள்ளார். இஷாந்த் ஷர்மாவின் பந்து வீச்சு திறன் மெருகெறிவருவதாகவும் கூறினார்.
இஷாந்த ஷர்மா மிகவும் உயரமாகவிருப்பதால், துடுப்பாட்டக்காரர்களை நோக்கி மிகவும் நேர்த்தியாகப் பந்துவீச முடியும், அதனை அவர் சிறப்பாகவே மேற்கொண்டு வருகின்றார். சர்வதேச ரிதியில் மிகவும் அற்புதமான வேகப்பந்து வீச்சாளராக இஷாந்த் உருவாகுவார் என்று வாஸ் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, இந்திய அணியின் துடுப்பாட்டக்காரர்களுக்கு முத்தையா முரளிதரன் தொடர்ந்தும் அச்சுறுத்தலாக விளங்குவார். முரளி அணியில் இடம்பெற்றிருந்தால் மற்றைய பந்துவீச்சாளர்களுக்கான சுமை அரைவாசியாகக் குறைந்துவிடும். அவரே எதிரணி வீரர்களை வீழ்த்திவடுவார் என்றும் சமிந்தா வாஸ் தெரிவித்தார். எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள இந்திய-இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கட் ஆட்டம் ரசிகர்களுக்கு பலத்த விருந்தாக அமையுமென்றும், சச்சின் டெண்டுல்கருக்கு எதிராக பந்து வீச ஆர்வமாகவிருப்பதாகவும் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் வாஸ் மேலும் கூறியுள்ளார். |
| < முந்தைய | அடுத்த > |
|---|