| இலங்கையின் ஒலிம்பிக் குழுவுக்கு சுசந்திக்கா தலைமை. |
|
|
| PTR. | |
| 20. July 2008 07:24 | |
சீனாவின் பீஜிங் நகரில் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 8ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் இலங்கை குழுவுக்கு குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திக்கா ஜெயசிங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை, இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நேற்று முன்தினம் அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் சிட்டியில் 2000ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப்பதக்கத்தினை சுசந்திக்கா ஜெயசிங்க வென்றுள்ளார். இலங்கையின் சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதலாவது வீராங்கனை என்ற பெருமையையும், இரண்டாவது நபர் என்ற பெருமையும் சுசந்திக்காவைச் சாரும். இந்த நிலையில், இம்முறை நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு இலங்கை குழுவின் தலைவராக சுசந்திக்கா நியமக்கப்பட்டுள்ளார். இவரே, ஒலிம்பிக்கின் ஆரம்ப மற்றும் இறுதி நிகழ்வுகளில் இலங்கையின் கொடியை எந்திச் செல்வார். அவர், தற்போது அமெரிக்காவில் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார். ஒலிம்பிக் போட்டிகளுக்கான இலங்கைக் குழுவில் இம்முறை 9 பேர் அடங்குகின்றனர். இதில் இரண்டு நீச்சல் வீரர்கள், ஒரு குத்துச்சண்டை வீரர், ஒரு பளுதூக்கும் வீரர், ஒரு குறுந்தூர ஓட்ட வீராங்கனை உள்ளிட்டவர்கள் அடங்குகின்றனர். இம்முறை குத்துச்சண்டை வீரர் அனுரத்த ரத்நாயக்க பதக்கல் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. |
| < முந்தைய | அடுத்த > |
|---|