29. August 2008 19:49
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
19. August 2008 23:28
8. August 2008 18:51
27. August 2008 15:01
15. August 2008 17:36
3. August 2008 15:57
சார்க் மாநாட்டை முன்னிட்டு வராலாற்றில் என்றுமில்லாத பாதுகாப்பு:உள்ளூர் வெளிநாட்டு பாதுகாப்பு அதிகாரி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
20. July 2008 07:41

saarc.jpgஇந்த மாத இறுதியில் கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டை முன்னிட்டு சுமார் 12,000 இற்கும் மேற்பட்ட பொலிசாரும், ஆயுதந்தாங்கிய படையினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதுதொடர்பில், ஏற்கனவே பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பல்வேறு இடங்களில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிமால் மெதிவக தெரிவித்துள்ளார்.

சார்க் மாநாடு நடைபெறவுள்ள காலப்பகுதியில் கொழும்பு நகரின் முக்கிய பகுதிகளில் ஆயுதந்தாங்கிய படையினரின் உதவியுடன் பொலிசார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த உள்ளூர் பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒருபகுதியாக, நூற்றுக்கணக்கான வெளிநாட்டு பொலிசாரும், பாதுகாப்பு அதிகாரிகளும், குறிப்பாக பெருமளவான இந்தியப் படையினரும் கொழும்பில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு தொடர்பில் இன்டர்போல் பொலிசாரின் உதவியும் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தத்தமது நாட்டுத் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்குகின்ற அதேநேரம், உள்ளூர் அதிகாரிகளுடன் கூட்டிணைந்து பணியாற்றுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சார்க் மாநாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னிட்டு கொழும்பு நகரின் நான்கு இடங்கள் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். 

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையமும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களும், கொழும்பு கோட்டையும் அதனை சூழவுள்ள பகுதிகளும், பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபமும் அதனை சூழவுள்ள பகுதிகளும், கொள்ளுப்பிட்டியிலிருந்து காலிமுகத்திடல் வரையிலான பகுதிகளுமே அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

 
< முந்தைய   அடுத்த >