20. August 2008 20:19
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
14. August 2008 16:37
2. August 2008 23:48
3. August 2008 15:57
27. July 2008 09:43
31. July 2008 18:12
மதவாச்சி சாவடியில் பல மணிநேரம் வெயிலில் காத்திருக்கும் பயணிகள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
20. July 2008 10:40
madawachchiy.gifமதவாச்சி சோதனைச் சாவடியில் குறைந்தளவிலான பாதுகாப்பு அதிகாரிகளே கடமையாற்றுவதால் பயணிகள் நீண்ட நேரம் கடும் வெயிலில் காத்திருக்க வேண்டியுள்ளதுடன் பல்வேறு சிரமங்களையும் எதிர் நோக்குகின்றனர் இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

 மதவாச்சி சோதனைச் சாவடியூடாக நாளாந்தம் போக்குவரத்துச் செய்யும் பயணிகளின் அவல நிலை தொடர்பாக வடமத்திய மாகாணப் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு நேற்றைய தினம் எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

செல்வம் அடைக்கலநாதன் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது;

""தற்போது மதவாச்சிச் சோதனைச் சாவடியூடாக நாள்தோறும் மன்னார், வவுனியாவிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் போக்குவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களைச் சோதனையிடுவதற்கு ஒரு சில பாதுகாப்பு அதிகாரிகள் மட்டும் கடமையிலீடுபடுவதால் இப்பெருந்தொகையான பொதுமக்கள், வர்த்தகர்கள், அதிகாரிகள், முதியவர்கள், நோயாளர்கள் பல மணிநேரம் கடும் வெயிலில் பிரயாணக் களைப்புடன் நின்ற நிலையில் காத்துக் கிடக்கின்றனர்.

இதனால், இவர்கள் பல சிரமங்களுக்குட்படுவதுடன் தத்தமது வேலைகளை உரிய நேரத்திற்கு செய்ய முடியாதிருப்பதாகவும் மிக வேதனையுடன் எனது கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.

எனவே இச்சோதனைச் சாவடியில் கூடுதலான அதிகாரிகளை கடமையிலீடுபடுத்தி பொதுமக்கள் இவ் அவல நிலையிலிருந்து விடுவித்து அவர்களின் இயல்பான போக்குவரத்துக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன்'.

 

 
< முந்தைய   அடுத்த >