20. November 2008 13:11
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
15. October 2008 12:52
11. October 2008 23:48
27. August 2008 15:01
12. October 2008 00:13
29. September 2008 22:52
நட்சத்திர வீரர் சச்சினை வீழ்த்துவதே இலக்கு: அஜந்த மெண்டிஸ். அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
PTR.   
20. July 2008 14:28
ajantha_mendis.jpgஇலங்கை-இந்திய கிரிக்கட் அணிகளுக்கிடையில் எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்டக்காரர் சச்சின் டெண்டுல்கரின் விக்கட்டை வீழ்த்துவதே தனது இலட்சியம் என்று இலங்கையின் இளம் சுழல் பந்து வீச்சாளர் அஜந்த மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரின் விக்கட்டை வீழ்த்துவது என்பது  தன்னுடைய கனவென்றும், குறிப்பாக டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் அதிக ஓட்டங்களை எடுத்த பிரையன் லாராவின் சாதனையை அவர் முறியடிக்கவுள்ள கட்டத்தில் சச்சின் டெண்டுல்கரின் விக்கட்டை வீழ்த்துவது மிகப்பெரிய விஷயமாக இருக்கும் என்றும் மெண்டிஸ் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்திய அணியின் துடுப்பாட்ட தூண்களான கங்குலி, ராவிட், லஷ்மண் ஆகியோருக்கு எதிராகவும் பந்து வீசுவது மிகவும் சவாலாக இருக்கும் என்று கூறிய அவர், இந்த  சவாலை ஆர்வத்தோடு எதிர்நோக்கி இருப்பதாகவும் தெரிவித்தார். இந்திய துடுப்பாட்டக்காரர்களின் துடுப்பாட்ட முறைமை அவதானித்து அதற்கு ஏற்றவகையில் பந்து வீசுவதற்கு பயிற்சி பெற்று வருவதாகவும் மெண்டிஸ் தெரிவித்தார்.

இலங்கைக் கிரிக்கட் அணிக்கு தற்போது கிடைத்துள்ள மிகவும் முக்கியமான பந்துவீச்சாளராக அஜந்த மெண்டிஸ் கணிக்கப்படுகின்றார். கடந்த ஆசியக் கிண்ணக் கிரிக்கட் போட்டிகளின் போது 17 விக்கட்டுக்களை வீழ்த்தி தொடராட்ட நாயகன் விருதையும் அவர் பெற்றுள்ளார்.

 
< முந்தைய   அடுத்த >