20. November 2008 18:59
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
11. October 2008 23:48
27. August 2008 15:01
15. October 2008 12:52
13. October 2008 13:01
12. October 2008 00:13
நேபாள ஜனாதிபதித் தேர்தல் மீண்டும் நடைபெறவுள்ளது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
20. July 2008 16:02
nepal.jpgநேபாளத்தில் முதலாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலை மறுபடியும் நடத்துமாறு கோரப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி பதவிக்காக போட்டியிட்ட 3 ஜனாதிபதி வேட்பாளர்களில் எவருமே பெரும்பான்மையாகப் பெற வேண்டிய 298 வாக்குகளை பெறவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையிலேயே ஜனாதிபதியைத் தெரிவு செய்ய மீளவும் தேர்தலை நடத்தும்படி கோரப்பட்டுள்ளது.

மறுதேர்தலை நடத்துவதற்கான திகதி,  இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள அரசியலமைப்புச் சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவோயிஸ்ட் கட்சி வேட்பாளர் ராம்ராஜா பிரசாத் சிங், நேபால் காங்கிரஸ் வேட்பாளர் ராம்பரன் யாதேவ் மற்றும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி வேட்பாளர் ராம் பிறிட் பஸ்வன் ஆகியோர்கள் நேபாளத்தின் முதலாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலி;ல் போட்டியிட்டனர்.   

இதேவேளை நேபாளத்தின் முதலாவது உப ஜனாதிபதியாக பரமானந்த ஜி மாதேஸி தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

நேற்றுக் காலை அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் நேபாளத்தின் முதலாவது ஜனாதிபதி மற்றும் உப ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தங்களது வாக்கை செலுத்தியுள்ளனர். 

பதிவுசெய்யப்பட்ட 594 மொத்த வாக்குகளில் 578 வாக்குகளை அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்துள்ள போதிலும், 16 அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் வாக்களிப்பதற்காக வாக்களிப்பு நிலையங்களில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் கூடுதலான வாக்குகளைப் பெற்ற இருவர்களுக்கிடையிலேயே மறுதேர்தலை நடத்தவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது
 

 
< முந்தைய   அடுத்த >