20. November 2008 19:28
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
21. August 2008 23:30
13. October 2008 13:01
3. October 2008 18:45
15. October 2008 12:52
29. September 2008 22:52
வருட ஆரம்பம் முதல் இதுவரை 180 பேர் வெள்ளை வானில் கடத்தல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
எமது கொழும்பு நிருபர்   
20. July 2008 20:55

whait_van.jpgகொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் வருட ஆரம்பம் முதல் இதுவரை 180 பேர் வெள்ளை வானில் கடத்தப்பட்டுள்ளனர்.

இது குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று மலையக மக்கள் முன்னணியின் எம்.பி. யும் பிரதி அமைச்சருமான பெ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2006/ 2007 ஆம் ஆண்டுகளை மீறிய வகையில் கடந்த 6 மாதத்திலேயே அதிகமானோர் கடத்தப்பட்டுள்ளதாக புகார்கள் கிடைத்துள்ளன.

இத்தகைய நிலை கவலைக்குரிய விடயமாகும் என்றும் அவர் மேலும் கூறினார். இதேவேளை வவுனியாவில் இரண்டு இளைஞர்களும் வெள்ளவத்தையில் ஒருவருமாக மூன்று இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் வாழ்க்கைத் தொழில் தொழில்நுட்ப பயிற்சி பிரதி அமைச்சருமான பெ. இராதாகிருஷ்ணனிடமும் கடத்தல் மற்றும் கைது தொடர்பானவர்கள் மீதான விசாரணைகளை கண்காணிக்கும் குழுவிடமும் பொலிஸ் நிலையங்களிலும் புகார் செய்யப்பட்டுள்ளது.

வவுனியா கருவேப்பங்குளத்தைச் சேர்ந்த செல்வராஜா சுதன் (25) கிளிநொச்சி ஊற்றுக்குளத்தைச் சேர்ந்த ஆர். வின்சன்ட் விமல்ராஜ் (26) வவுனியா ஸ்ரீ நகர் பூந்தோட்டத்தைச் சேர்ந்த சின்னராஜா ஜனார்த்தனன் (32) வெள்ளவத்தையிலும் காணாமல் போயுள்ளதாக புகார் செய்யப்பட்டுள்ளது.

 
< முந்தைய   அடுத்த >