20. November 2008 19:05
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
21. August 2008 23:30
12. October 2008 00:13
27. August 2008 15:01
11. October 2008 23:48
15. October 2008 12:52
ஈராக்கில் இருந்து அமெரிக்க படை வாபசுக்கு ஈராக் பிரதமரிடம் புஷ் சம்மதம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
20. July 2008 21:53
ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை படிப்படியாக வாபஸ் பெற காலக்கெடு நிர்ணயிப்பதற்கு ஈராக் பிரதமரிடம் புஷ் சம்மதம் தெரிவித்துள்ளார். இதற்கு அமெரிக்க எதிர்க்கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

புஷ் பிடிவாதம்

ஈராக்கில் சதாம் உசேன் ஆட்சி ஒழிக்கப்பட்ட பின்னரும், அங்குள்ள தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக, அமெரிக்க படைகள் அங்கு முகாமிட்டுள்ளன. சுமார் ஒன்றரை லட்சம் அமெரிக்க படையினர், இன்னும் அங்கு உள்ளனர்.

தீவிரவாதிகள் தாக்குதலில் அமெரிக்க படைகளுக்கு உயிர்ச்சேதம் ஏற்படுவதால், ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெற வேண்டும் என்று அமெரிக்க எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி வற்புறுத்தி வருகிறது. ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரக் ஒபாமா, தான் பதவிக்கு வந்தால், 16 மாதங்களில் அமெரிக்க படைகளை வாபஸ் பெறுவேன் என்று கூறியுள்ளார்.

ஆனால் அதிபர் புஷ்சோ, படைகளை வாபஸ் பெற்றால், ஈராக் தீவிரவாதிகளின் வன்முறை அதிகரித்து விடும் என்று கூறி, படை வாபசை தவிர்த்து வந்தார்.

இருப்பினும், சமீபகாலமாக ஈராக்கில் வன்முறை சம்பவங்கள் குறைந்து வருகின்றன. எனவே, அமெரிக்க படைகளை வாபஸ் பெற காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்று ஈராக் பிரதமர் நுரி அல்-மாலிகி கடந்த வாரம் வலியுறுத்தினார்.

ஒப்புதல்

இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் புஷ்சும், ஈராக் பிரதமரும் `வீடியோ கான்பரன்சிங்' வசதி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெற காலக்கெடு நிர்ணயிப்பதற்கு இருவரும் ஒப்புக்கொண்டனர். இதுதொடர்பாக இம்மாத இறுதிக்குள் உடன்பாடு செய்து கொள்ள திட்டமிட்டனர்.

தன்னிச்சையாக தேதி நிர்ணயிக்காமல், கள நிலவரம் முன்னேற்றம் அடைவதன் அடிப்படையில் படை வாபஸ் அமைய வேண்டும் என்றும் இருவரும் ஒப்புக்கொண்டனர்.

வரவேற்பு

புஷ்சின் இந்த கொள்கை மாற்றத்தை எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி வரவேற்றுள்ளது. அக்கட்சியின் செனட் வெளியுறவு கமிட்டி தலைவர் ஜோசப் பிடன் கூறியதாவது:-

ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெற காலக்கெடு நிர்ணயிப்பதற்கு இதுவரை பிடிவாதமாக எதிர்ப்பு தெரிவித்து வந்த அதிபர் புஷ்சின் நிலையில் ஏற்பட்ட மாற்றத்தை நான் வரவேற்கிறேன். இறுதியாக அவர் உண்மை நிலையை புரிந்து கொண்டுள்ளார்.

 

 
< முந்தைய   அடுத்த >