20. November 2008 18:50
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
21. August 2008 23:30
4. October 2008 12:47
12. October 2008 00:13
15. October 2008 12:52
29. September 2008 22:52
கச்சத்தீவை மீட்பதே நிரந்தரத் தீர்வு: மு.க. ஸ்டாலின் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
21. July 2008 08:11

stalin.jpgதமிழக மீனவர்கள் மீது இலங்கைப் படையினர் தாக்கும் பிரச்னைக்கு கச்சத் தீவை மீட்பதே நிரந்தரத் தீர்வாக அமையும் என மாநில ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

மதுரை விமானநிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைத்து பேரூராட்சிகளின் அண்ணா மறுமலர்ச்சித் திட்ட கையேடுகளை வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மீனவர்களுக்காக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் திமுக சார்பில் உண்ணாவிரதம் வெற்றிகரமாக நடைபெற்றது.

மீனவர் நலன் காக்கப்பட வேண்டும் என்பதை உண்ணாவிரதப் போராட்டம் மூலம் திமுக வெளிப்படுத்தி உள்ளது.

போராட்டத்தின் பலனாக மத்திய அரசு சார்பில் தில்லியில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளை அழைத்து தமிழக மீனவர் தாக்கப்பட்டது குறித்து பேசப்பட்டுள்ளது. இது போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாகும்.

தமிழக முதல்வர் குறிப்பிட்டது போல தமிழக மீனவர் பிரச்னைக்கு கச்சத் தீவை மீட்பதே நிரந்தரத் தீர்வாக அமையும்.

கச்சத் தீவை மீட்க தனியாக போராட்டம் நடத்துவது குறித்து திமுக தலைமைதான் அறிவிக்க வேண்டும் என்றார்.

பின்னர் ராமநாதபுரம் கூட்டு குடிநீர்த் திட்டப் பணிகளை அவர் பார்வையிட்டார். இத் திட்டப் பணிகள் 2009 ஏப்ரலில் நிறைவு பெற்றவுடன் முதல்வர் கருணாநிதியால் தொடக்க விழா நடத்தப்படும் என அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

 
< முந்தைய   அடுத்த >