| ஆப்கானிஸ்தான் போர் மீது புஷ் கவனம் செலுத்தவில்லை - ஒபாமா குற்றச்சாட்டு |
|
|
| வா.கி.குமார் | |
| 21. July 2008 09:18 | |
|
கர்சாயுடன் சந்திப்பு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக்கட்சி சார்பில் போட்டியிட இருக்கும் வேட்பாளர் ஒபாமா, ராணுவ விமானத்தில் ஆப்கானிஸ்தான் சென்றார். அவர் ஈராக், ஜோர்டான், இஸ்ரேல், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கும் செல்ல இருக்கிறார். ஆப்கானிஸ்தானில் அவர் அமெரிக்க ராணுவ வீரர்களை சந்தித்து பேசினார். அவர் அந்த நாட்டு ஜனாதிபதி கர்சாய்யையும் சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- போதிய கவனம் இல்லை ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்கள் செய்து வரும் வீரதீரச் செயல்களுக்காக நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன். ஆப்கானிஸ்தான் போர் மீது புஷ் நிர்வாகம் போதிய கவனம் செலுத்த வில்லை. ஈராக் போரில் தான் புஷ் அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. அதன் கவனம் ஈராக்கில் இருந்து ஆப்கானிஸ்தான் போர் மீது விழவேண்டும். ஈராக்கில் இருந்து அமெரிக்க துருப்புகளை 16 மாதங்களில் திரும்பப்பெற வேண்டும். ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 2 பிரிகேடுகளை அனுப்ப வேண்டும். அதாவது 7000 துருப்புகளை அனுப்ப வேண்டும். 4 மடங்கு அதிகம் ஈராக்கில் தேவைக்கு அதிகமாக 4 மடங்கு துருப்புகள் உள்ளன. ஆனால் ஆப்கானிஸ்தானில் 36 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் மட்டுமே உள்ளனர். கடந்த மே, ஜுன் மாதங்களில் ஈராக்கை விட ஆப்கானிஸ்தானில் தான் அதிக அமெரிக்க வீரர்கள் பலியாகி உள்ளனர். இவ்வாறு ஒபாமா கூறினார். அமெரிக்க ராணுவத்தளபதி ஜெப்ரி ஸ்கால்சர் ஒபாமாவிடம் ராணுவ நிலைமையை எடுத்துக்கூறினார். ஒரே ஒரு ஜனாதிபதி ஒபாமாவுடன் செனட்டர்கள் ஜாக் ரெய்டு, சக் ஹகெல் ஆகியோரும் ஆப்கானிஸ்தான் சென்று உள்ளனர். நான் ஒரு செனட்டராக தான் ஆப்கானிஸ்தான் வந்து இருக்கிறேன். ஒரே நேரத்தில் ஒரு ஜனாதிபதி தான் இருக்கமுடியும். ஜனாதிபதி தான் வெளிநாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும். நான் கர்சாயுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அவர் பேசினார் - நான் கேட்டுக்கொண்டேன். பேசுவதை விட காது கொடுத்து கேட்பதில் தான் எனக்கு ஆர்வம் அதிகம் என்றும் ஒபாமா கூறினார். இதற்கிடையில் ஒபாமா வின் தேர்தல் போட்டியாளரான ஜான் மெக்கைனும் ஆப்கானிஸ்தானுக்கு கூடுதல் ராணுவ வீரர்களை அனுப்ப வேண்டும் என்று கோரி இருக்கிறார்.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|




ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் தீவிரவாதத்துக்கு எதிரான போரில் புஷ் நிர்வாகம் போதிய கவனம் செலுத்த வில்லை'' என்று ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் ஒபாமா குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
