20. November 2008 14:35
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
27. August 2008 15:01
21. August 2008 23:30
13. October 2008 13:01
15. October 2008 12:52
4. October 2008 12:47
அமெரிக்கப் படையினரை வாபஸ் பெறும் ஒபாமாவின் யோசனைக்கு ஈராக் பிரதமர் வரவேற்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
21. July 2008 15:38
obama.jpgஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகளை வாபஸ் பெறுவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரான பராக் ஒபாமா தெரிவித்த யோசனையை ஈராக் பிரதமர் நூரி அல்-மலிக்கி வரவேற்றுள்ளதாக ஜெர்மனியப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

பராக் ஒபாமா ஜனதிபதியாகப் பதவியேற்றால், ஈராக்கிலிருந்து 16 மாதங்களுக்குள் அமெரிக்கப் படைகள் வெளியேற்றப்படுமென அவர் குறிப்பிட்டிருந்த போதே, ஈராக் பிரதமர் நூரி அல்-மலிக்கி இதனை வரவேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்தக் காலக்கெடுவானது மிகப் பொருத்தமானதாகவும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலும் அமைந்துள்ளதாகவும் அல்-மலிக்கி தெரிவித்ததாக அந்த நாட்டுப் பத்திரிகை செய்தி  வெளியிட்டுள்ளது.

எனினும், பத்திரிகைச் செய்தி அல்-மலிக்கியின் கருத்தை துல்லியமாக எடுத்துக் கூறவில்லையெனவும், காலக்கெடு குறித்து யாருடைய திட்டத்தையும் அல்-மலிக்கி அப்படியே அங்கீகரிக்கவில்லையெனவும் அவரது செய்தித் தொடர்பாளரான அலி அல்-தாபா கூறியுள்ளார்.

இதேவேளை அல்-மலிக்கியின் ஆலோசகரான சாதிக் அல்-ரிபாகியும் இதே கருத்தினைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அமெரிக்காவின் தேர்தல் பிரசாரத்தில் பங்கெடுத்துக் கொள்வது எங்களது நோக்கமல்லவெனவும் அவர் கூறியுள்ளார்.

 

 
< முந்தைய   அடுத்த >