| கச்சத்தீவு தாரை வார்ப்பில் கருணாநிதி நாடகம்: ஜெயலலிதா |
|
|
| வா.கி.குமார் | |
| 21. July 2008 19:43 | |
|
இது குறித்து, திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:- சென்னையில் நடைபெற்ற தி.மு.க.வின் உண்ணாவிரதத்தில் பேசிய முதல்வர் கருணாநிதி, கடந்த 1974 ஆகஸ்ட் 21-ம் தேதி சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், அதை அவர் முன்மொழிந்ததாகவும் கூறியிருக்கிறார். ஆனால், கச்சத் தீவை தாரை வார்ப்பதற்கான ஒப்பந்தம் அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தியால், 1974-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி கையெழுத்திடப்பட்டது. அதாவது ஒப்பந்தம் கையெழுத்தாகி கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கழித்துத் தான் தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார். இந்திய-இலங்கை உடன்பாடு கையெழுத்தான பிறகு, பிரதமருக்கு கடிதம் எழுதியும், சட்டப் பேரவையில் தீர்மானம் இயற்றியும் கண்துடைப்பு நாடகத்தை 1974-ல் அரங்கேற்றியிருக்கிறார். மீனவ மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால், இந்திய-இலங்கை உடன்பாடு கையெழுத்தாவதற்கு முன்பே தீர்மானத்தை நிறைவேற்றி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். அதைச் செய்ய தவறி விட்டார். அதுகுறித்த, சட்டப் பேரவைத் தீர்மானத்தில் கூட மத்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தம் "வருத்தம் அளிக்கிறது' என்று கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறாரே தவிர, "எதிர்க்கிறோம்' என்ற சொல் தீர்மானத்தின் எங்கேயும் குறிப்பிடவில்லை என்று கூறியுள்ளார் ஜெயலலிதா. |
| < முந்தைய | அடுத்த > |
|---|




கச்சத் தீவை தாரை வார்க்க உடன்பாடு கையெழுத்தான பிறகு, பிரதமருக்கு கடிதம், பேரவையில் தீர்மானம் என்று கண்துடைப்பு நாடகத்தை கருணாநிதி அரங்கேற்றியிருக்கிறார் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.
