| தொழிலாளர் கோரிக்கையை நிறைவேற்றாத கட்சிகள் தொழிற்சங்கம் நடத்த தகுதியில்லை: ராமதாஸ் |
|
|
| வா.கி.குமார் | |
| 22. July 2008 09:17 | |
|
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தொழிலாளர் "வாழ்வுரிமை மாநாடு' திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் ராமதாஸ் பேசியது: ஆண்ட கட்சி, ஆளும் கட்சியைச் சார்ந்த இரு தொழிற்சங்கங்களுக்கு ஒரு கேள்வி. தொழிலாளர்களின் சாதாரண கோரிக்கைகளைக் கூட உங்களது ஆட்சியில் நிறைவேற்றவில்லை எனில், தொழிற்சங்கம் நடத்தும் தார்மிக உரிமையை நீங்கள் இழந்துவிட்டீர்கள். கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தயக்கம் இருந்தால், என்னை அணுகுங்கள். போராட்டம் என்றால் எனக்கு லட்டு சாப்பிடுகிற மாதிரி விருப்பமானது. பிற மாநில சட்டப் பேரவை உறுப்பினர் குழுக்கள் கூட வியக்கும் வகையில் நுகர்பொருள் வாணிபக் கழகம் சிறப்பாக இயங்குகிறது. இதற்காக உழைக்கும், "வியர்வை மனிதர்களாகிய' உங்களது சாதாரண கோரிக்கைகளைக் கூட நிறைவேற்ற அரசுக்கு மனம் இல்லை. நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு ஆண்டுதோறும் அரசு ரூ. 2,000 கோடி மானியமாக வழங்கி வருகிறது. இதில் ரூ. 22 கோடியைக் கூடுதலாக அரசு வழங்கினாலே போதும். தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தலாம். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. கூட்டத்தில் பாமக தலைவர் ஜி.கே. மணி, சட்டப் பேரவை உறுப்பினர் வேல்முருகன், சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜே. குமார்லால், பொதுச் செயலர் அ.கு. ஏழுமலை, பாட்டாளி தொழிற்சங்கப் பேரவையின் பொதுச் செயலர் அ. ஞானசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|





"ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் தொழிலாளர்களின் சாதாரண கோரிக்கைகளைக் கூட ஆட்சியில் நிறைவேற்றவில்லை எனில், தொழிற்சங்கம் நடத்தும் தார்மிக உரிமையை இழந்துவிட்டன'' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் புகார் கூறினார்.
