20. November 2008 14:20
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
19. August 2008 23:28
12. October 2008 00:13
21. August 2008 23:30
29. September 2008 22:52
27. August 2008 15:01
அதி தீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ள நோயாளியாக மன்மோகன் சிங் அரசு-எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
22. July 2008 13:41
ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசாங்கம் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளியின் நிலைமையில் உள்ளதாக இந்திய எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் நம்பிக்கைத் தீர்மானம் பிரேரணை விவாதத்தை எதிரணித் தரப்பில் ஆரம்பித்து வைத்து இந்தியப் பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் 2004 ஆம் ஆண்டு மே 22 இல் பதவியேற்ற அரசாங்கம் 4 வருடங்கள் 2 மாதங்கள் கழிந்த நிலையில் உயிர் வாழ்வுக்காக போராடுவதாக குறிப்பிட்டார்.

பிரதமர் மன்மோகன் சிங்கை கடுமையாக சாடிய அத்வானி காங்கிரஸ் தலைவியின் (சோனியா காந்தி) அனுமதியில்லாமல் எந்த வெளி நடவடிக்கையையும் உங்களால் மேற்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டார்.

இந்த விஷேட அமர்வை நடத்துவதற்காக எவரையும் குற்றம் சாட்ட முயற்சிக்க வேண்டாம், சிறுபான்மை அரசாங்கம் தொடர்ந்திருக்க அனுமதியளிப்பது, இந்திய பாராளுமன்ற வரலாற்றிலேயே இது முதற்தடவையாகும்.

இதற்கு எவரையாவது குற்றம்சாட்ட வேண்டுமானால் அந்த ஆள் உங்கள் அரசாங்கமே என்றும் மன்மோகன் சிங்கைப் பார்த்து அத்வானி கூறினார்.

அரசை தோற்கடிக்க விரும்புகிறோம் சீர்குலைக்க அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய அமெரிக்க உத்தேச அணு உடன்படிக்கை சர்ச்சையையடுத்து இடதுசாரிக் கட்சிகள் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதால் மன்மோகன் சிங்கின் அரசு சிறுபான்மை அரசாகிவிட்டது.

 

 
< முந்தைய   அடுத்த >