|
பாகிஸ்தான் மீது அமெரிக்க உளவுப் பிரிவு குற்றச்சாட்டு |
|
|
|
வா.கி.குமார்
|
|
23. July 2008 16:37 |
|
ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள தங்களது நாட்டு ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தானின் உதவியை அல்-காய்தா தீவிரவாத அமைப்பு நாடியதாக, அமெரிக்க உளவுப் பிரிவு குற்றம்சாட்டியுள்ளது.
அல்-காய்தா அமைப்பின் உயர் நிலைத் தலைவர்களில் மூன்றாவது இடத்தில் உள்ள முஸ்தபா அபு அல்-யாசித்துதான் பாகிஸ்தானின் உதவியை நாடினார் என்றும் அமெரிக்க உளவுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் டென்மார்க் நாட்டின் தூதரகம் தாக்கப்பட்டதற்கு இந்த அல்-காய்தா தீவிரவாதிதான் காரணம் என்று அமெரிக்க உளவுப் பிரிவு குற்றம்சாட்டியுள்ளது.
|