| நேபாள அதிபருக்கு சீனா வாழ்த்து |
|
|
| வா.கி.குமார் | |
| 23. July 2008 17:37 | |
|
நேபாள அதிபர் தேர்தல் முடிவு மகிழ்ச்சி அளிப்பதாகவும், அந்த நாட்டுடனான அரசியல் உறவு மேலும் வலுப்படும் என்றும் சீனா கூறியுள்ளது. இது தொடர்பான வாழ்த்துச் செய்தியில், "நேபாளத்தின் அதிபர் ராம் பரன் யாதவ், துணை அதிபர் பரமானந்த ஜா ஆகியோருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். சீனாவின் நட்பு நாடாக நேபாளம் விளங்குகிறது. அங்கு பொருளாதார வளர்ச்சி, அரசியல் ஸ்திரத்தன்மை, அமைதி நிலவ தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்று சீனா தெரிவித்துள்ளது. முன்னதாக திங்கள்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் நேபாள அதிபராக, நேபாள காங்கிரஸ் கட்சியின் ராம் பரன் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். |
| < முந்தைய | அடுத்த > |
|---|





நேபாள நாட்டின் முதல் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம் பரன் யாதவுக்கு சீனா செவ்வாய்க்கிழமை வாழ்த்துத் தெரிவித்துள்ளது.
