20. November 2008 13:58
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
21. August 2008 23:30
12. October 2008 00:13
15. October 2008 12:52
13. October 2008 13:01
4. October 2008 12:47
இடி தாக்கி இறந்தவர்களை நேரில் பார்த்தவர் அதிர்ச்சியில் சாவு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
23. July 2008 21:37

திண்டிவனம் அருகே மழைக்கு மரத்தடியில் ஒதுங்கியபோது இடி தாக்கியதில், 5 பேர் உயிரிழந்தனர். அவர்களை நேரில் பார்க்கச் சென்றவர் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.

திண்டிவனம் அருகே சலவாதி கிராமத்தைச் சேர்ந்தவர் இந்திராணி (45). இவரது கணவர் ராமநாதன் (50). இவர்களுக்கு சொந்தமான நிலத்தில் அறுவடைப் பணியில் 12 பேர் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திடீரென்று இடியுடன் கூடிய மழை பெய்ததையடுத்து அனைவரும் அங்கிருந்த வேப்ப மரத்தின் அடியில் ஒதுங்கினார்.

அப்போது திடீரென்று அந்த மரத்தின் மீது இடி விழுந்தது. இதில் சலவாதியைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் புருஷோத்துமன் (27), ஏழுமலை மகன் ராஜு (25), ராமநாதன் மனைவி இந்திராணி (45), மேல்பேட்டையைச் சேர்ந்த செபஸ்டின் மகன் தேவதாஸ் (35), குப்பன் மகன் விநாயகம் (32) ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காயமடைந்தவர்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த துயரக்காட்சியை நேரில் பார்க்க அதே பகுதியை சேர்ந்த விவசாயி பாண்டுரங்கன் (55) சென்றார். அங்கு துயரக்காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாண்டுரங்கன் நெஞ்சுவலி ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

 
< முந்தைய   அடுத்த >