| "பாலத்தை இடித்தது ராமர்தான்' |
|
|
| வா.கி.குமார் | |
| 24. July 2008 11:17 | |
|
ராமர் பாலத்தை ராமரே இடித்துவிட்டதாக கம்ப ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது என்று சேது சமுத்திரம் வழக்கில் மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ். நாரிமன் கூறினார். சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை நடந்தது. தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், ஜே.எம். பாஞ்சல் ஆகியோர் விசாரித்தனர். அரசு சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ். நாரிமன் கூறியதாவது: இத்திட்டத்தை நிறைவேற்ற தடை விதிக்கக் கோரும் மனுதாரர்கள், மதம், மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் வாதிடுகின்றனர். அவர்கள் நம்பும் புராண காவியத்தில் சொல்லப்பட்டுள்ள மற்ற விஷயங்களையும் பரிசீலிக்க வேண்டும். இலங்கைக்கு வேறு யாரும் செல்லக் கூடாது என்பதற்காக பாலத்தை ராமரே இடித்துவிட்டார் என்று கம்ப ராமாயணத்திலும், பத்ம புராணத்திலும் கூறப்பட்டுள்ளது. இடிக்கப்பட்டதை நீங்கள் வணங்க முடியாது. ராமர் அம்பு எய்தி, இந்த பாலத்தை மூன்றாக உடைத்தார் என்று கம்ப ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. ராமர் பாலத்தை வரலாற்றுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கூறுவோர் இதையும் கவனிக்க வேண்டும். சேது சமுத்திரம் திட்டத்தை நிறைவேற்ற எந்த பாலமும் இடிக்கப்படவில்லை. இத்திட்டத்தின் பணிகள் மிகுந்த கவனத்துடன் நிறைவேற்றப்படுகின்றன. சட்டம் மீறப்பட்டுள்ளதா என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும் என்றார் வழக்கறிஞர் நாரிமன். ராமர் பாலமோ அல்லது ஆதம் பாலமோ, மனிதனால் கட்டப்பட்டதா இல்லையா என்று இப்போது விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிபதிகள் கூறினர். நம்பிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கை நீங்கள் நடத்த விரும்பினால், அந்த நம்பிக்கையில் உள்ள மற்ற விஷயங்களையும் ஆராய வேண்டும் என்றார் வழக்கறிஞர் நாரிமன். ராமர் பாலத்தை இடிப்பதற்காகவே வேண்டுமென்றே 6 வது வழித்தடத்தை இத்திட்டத்துக்காக அரசு தேர்ந்தெடுத்துள்ளது என்று மனுதாரர்கள் கூறுவது சரியல்ல. இத்திட்டத்தை எதிர்த்து தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் வழக்கு தொடர்ந்துள்ளார். ராமர் பாலத்தை வரலாற்றுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். ஆனால் அவரும் கூட இந்த 6 வது வழித்தடத்தில்தான் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் என்றார் நாரிமன்.
2001-ம் ஆண்டு அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ராமர் பாலத்தின் வழியாக சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த தேர்தலில் அவரது கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தற்போது இத்திட்டத்தை அவர் எதிர்ப்பது ஏன் என்று "பாலத்தை இடித்தது ராமர்தான்' மாற்று வழி அறிவியல் பூர்வமாகவும், அரசியல் ரீதியாகவும் ஒப்புக் கொள்ளக் கூடிய மாற்று வழியில் இத்திட்டத்தை நிறைவேற்றலாம் என்று நீதிபதிகள் கூறினர். ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி வரையிலான 4 வது வழியில் இத்திட்டத்தை நிறைவேற்றலாம் என்று மனுதாரர்கள் கூறுவது சாத்தியமல்ல என்றார் அரசு தரப்பு வழக்கறிஞர் நரிமன். அந்த வாதம் அவர்களுக்கே பாதகமாக இருக்கும். 4-வது வழியில் சேது சமுத்திரம் நிறைவேற்றப்பட்டால், 6 வது வழியில் இருக்கும் ராமர் பாலத்துக்குச் சென்று பக்தர்கள் வழிபட வழி இருக்காது என்றார் நாரிமன். |
| < முந்தைய | அடுத்த > |
|---|




