| புஷ்ஷிடமிருந்து எவ்வித பரிசும் வாங்கவில்லை: பிரிட்டிஷ் பிரதமர் மறுப்பு |
|
|
| வா.கி.குமார் | |
| 24. July 2008 11:20 | |
|
அமெரிக்க அதிபர் புஷ்ஷிடமிருந்து விமான பயணத்தின் போது அணிந்து கொள்ளும் மேலாடை உள்பட எந்த ஒரு பரிசுப் பொருளும் தான் வாங்கவில்லை என, பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரெüன் மறுத்துள்ளார். வெளிநாட்டுத் தலைவர்கள் பரிசாக அளிக்கும் பொருள்கள் 140 பவுண்ட்டுக்கு மேல் விலை மதிப்புடையதாக இருப்பின் அதை பிரிட்டிஷ் பிரதமராகவுள்ளவர் நாட்டு மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். அந்தவகையில், கார்டன் பிரெüன் தனது கடந்த ஆண்டு வெளிநாட்டு பயணத்தின் போது அளிக்கப்பட்ட பரிசுகள் குறித்தும், அதன் விலை மதிப்பு குறித்தும் அண்மையில் தெரிவித்தார். இதைக் கவனித்த சிலர், கார்டன் பிரெüன் கடந்த ஆண்டு அமெரிக்கா சென்ற போது அவருக்கு அந்நாட்டு அதிபர் ஜார்ஜ் புஷ், விமான பயணத்தில் அணியும் மேலாடையை பரிசாக அளித்தார். ஆனால், அதை கார்டன் பிரெüன் தெரிவிக்கவில்லை என புகார் எழுப்பினர். ஆனால், புகாரை கார்டன் பிரெüன் ஆணித்தரமாக மறுத்துள்ளார். |
| < முந்தைய | அடுத்த > |
|---|




