20. November 2008 18:40
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
13. October 2008 13:01
19. August 2008 23:28
3. October 2008 18:45
12. October 2008 00:13
29. September 2008 22:52
பா.ம.க.வுடன் அங்கு கூட்டணி; இடதுசாரிகளுடன் இங்கு கூட்டணி: முதல்வர் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
24. July 2008 20:31

karunanidhi-3.jpgமத்திய அரசில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் பா.ம.க. அங்கம் வகித்தபோதிலும், தமிழகத்தில் அக் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று முதல்வர் கருணாநிதி தில்லியில் புதன்கிழமை கூறினார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து புதன்கிழமை தில்லி வந்த அவர் பிரதமர் மன்மோகன் சிங், கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.

பா.ம.க. உறவு துண்டிக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்வீர்களா என்று கேட்டதற்கு, அதற்கான வாய்ப்பே கிடையாது என்று பதில் அளித்தார்.

மத்திய அரசுக்கு இடதுசாரிகள் ஆதரவை விலக்கிக் கொண்டதால்தான் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்து பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தக் கட்சிகளுடன் கூட்டணி பற்றிக் கேட்டதற்கு, தமிழகத்தில் இடதுசாரிகளுடன் உறவு இருப்பதாக முதல்வர் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:

சோனியாவின் வீட்டில் நடந்த கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மீனவர் பிரச்னை பற்றி பேசினேன்.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர், மீன்வளத் துறை உயரதிகாரிகள் ஆகியோர் இம் மாதம் 31-ம் தேதி தில்லியில் பாதுகாப்புத் துறை ஆலோசகர் எம்.கே. நாராயணனை சந்தித்துப் பேசுகின்றனர்.

அக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் கருத்துகள் பிரதமரிடம் தெரிவிக்கப்படும். அதன் அடிப்படையில் சார்க் மாநாட்டில் பிரதமர் பேசுவதாகக் கூறியிருக்கிறார்.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை, நீதிமன்ற அனுமதியுடன் நிறைவேற்றுவோம்.

மத்தியக் கூட்டணியில் இருந்து விலகிவிட்டாலும், தமிழகத்தைப் பொருத்தவரை இடதுசாரிகளுடன் எங்கள் உறவு தொடர்கிறது. மூன்றாவது அணி என்பது வேறு, இடதுசாரிகளுடன் உறவு என்பது வேறு.

தேசிய அளவிலான மூன்றாவது அணியில் திமுக இல்லை என்று இடதுசாரிகள் சொல்லவில்லை.

தலித் பெண் என்ற வகையில் மாயாவதி உயர்பதவிக்கு முன்னேறுவது பற்றி திமுகவுக்கு கருத்து மாறுபாடு ஏதும் இல்லை.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் சட்டவிரோதமானது என கர்நாடகம் சொல்வது சரியல்ல. ஏற்கெனவே கையெழுத்திட்ட ஒப்பந்தப்படிதான் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

முல்லைப்பெரியாறு அணை தொடர்பான சிக்கலை சட்டரீதியான வழிகளில் எதிர்கொள்வோம் என்று முதல்வர் கூறினார். தில்லியில் இருந்து வியாழக்கிழமை மாலை முதல்வர் சென்னை திரும்புகிறார்.


"வீட்டில் உள்ளவர்களே பயன்படுத்திக் கொள்ளவில்லை'

 தன்னுடைய அனுபவத்தை வீட்டில் உள்ளவர்களே பயன்படுத்திக் கொள்ளவில்லை என்கிற நிலையில், தில்லியில் உள்ளவர்கள் எப்படி பயன்படுத்திக் கொள்வார்கள் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பினார்.

"உங்களுடைய அரசியல் அனுபவத்தை தில்லி தலைவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று தயாநிதி மாறன் கூறியிருக்கிறாரே?'' என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.

 
< முந்தைய   அடுத்த >