20. November 2008 18:22
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
3. October 2008 18:45
4. October 2008 12:47
13. October 2008 13:01
27. August 2008 15:01
15. October 2008 12:52
அணுசக்தி ஒப்பந்தம் விரைவில் நிறைவேறும்: அமெரிக்கா அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
24. July 2008 20:44

flag_usa.jpgஅணுசக்தி ஒப்பந்தம் விரைவில் நிறைவேறும் என அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் டானா பெரினோ புதன்கிழமை கூறியது:

 இப்போது அணுசக்தி ஒப்பந்தத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல முடியும் என அமெரிக்கா நம்புகிறது. அமெரிக்க நாடாளுமன்றம் கூடுவதற்கு இன்னும் நிறைய காலம் இருப்பதாகக் கூற முடியாது. எனினும் அதற்கு முன்னதாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவிடும்.

அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவுக்குத்தான் நிறையப் பயன் கிடைக்கப்போகிறது. இந்தியாவின் எரிசக்தித் தேவையை நிறைவேற்றவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் இதன் மூலம் வழி கிடைக்கும்.

அண்மையில் ஜப்பானில் ஜி-8 நாடுகளின் கூட்டம் நடந்தபோது, அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ஜார்ஜ் புஷ்ஷும் மன்மோகன் சிங்கும் ஆலோசனை நடத்தினர் என்றார் பெரினோ.

பெரினோவின் கருத்தையே பிரதிபலித்த அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் கார்டன் ஜான்ட்ரோ, அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச அணுசக்திக் கழகம், அணுஎரிபொருள் வழங்கும் நாடுகள் குழு ஆகியவற்றுடனும் புஷ் நிர்வாகம் பேச வேண்டியிருக்கிறது என்றார்.

அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கான நாள்கள் குறைவாக இருப்பதால், அணுசக்தி ஒப்பந்த விஷயத்தில் அமெரிக்கா விரைந்து செயலாற்றும் என மற்றொரு செய்தித் தொடர்பாளர் கோன்ஸலோ கலோகோஸ் தெரிவித்தார்.

"அணுசக்தி ஒப்பந்தத்தை அமலாக்குவது தொடர்பாக தொடர்ந்து இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம்.

அணுசக்திக் கழகத்துடனான இந்தியா சார்ந்த அணுஉலைப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தொடர்பான உடன்பாடு இறுதி செய்யப்பட்டுவிட்டது. அணுசக்தி கழக கவர்னர்களின் ஒப்புதலைப் பெறுவதே அடுத்தபடியாகும்.

இது தொடர்பாக அணுசக்தி கழக கவர்னர்களிடம் அமெரிக்கா பேச்சு நடத்தி வருகிறது. அதில் சிலர் இன்னும் உடன்பாட்டை பரிசீலித்து வருகிறார்கள்.

இன்னும் சில நாள்களில் ஒப்பந்தம் தொடர்பான விவரங்கள் வெளியிடப்படும்.

அதன்பிறகு அணுஎரிபொருள் வழங்கும் நாடுகளின் கூட்டத்திலும் இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்' என்றார் கோன்ஸலோ.

 
< முந்தைய   அடுத்த >