| பாகிஸ்தானில் தாலிபான் தலைவர் கைது |
|
|
| வா.கி.குமார் | |
| 25. July 2008 19:17 | |
|
பலூசிஸ்தான் மாகாணத்தில் ஆப்கன் மக்கள் வாழும் கரோடாபாத் பகுதியில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் திடீர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அங்கு தாலிபான் தலைவர் முல்லா ரஹீம் கைது செய்யப்பட்டார். தாக்குதல் திறன் குறையாது: முல்லா ரஹீம், ஆப்கானிஸ்தானின் ஹெல்மன்ட் மாகாணத்தில் தாலிபான் அமைப்பை தலைமையேற்று நடத்திய முக்கியத் தலைவர் ஆவார். அவரை கைது செய்தது பாராட்டத்தக்கது. எனினும், அவரை கைது செய்ததன் மூலம் தாலிபான்களின் தாக்குதல் திறன் உடனடியாகக் குறைந்து விடும் என்று கூற முடியாது. அவர்கள் நீண்டகால போராட்டத் திட்டத்தை வகுத்து, அதற்கேற்பச் செயல்பட்டு வருகிறார்கள் என, ஆப்கானிஸ்தானின் ஹெல்மன்ட் பகுதியில் முகாமிட்டுள்ள பிரிட்டிஷ் பாதுகாப்புப் படை செய்தித் தொடர்பாளர் டோனி தெரிவித்துள்ளார். இதனிடையே, பாகிஸ்தான் மீது அன்னிய சக்திகள் தாக்க முயல்வதை ஒரு போதும் சகித்துக் கொள்ள முடியாது என, பாகிஸ்தானின் ஆளும் கூட்டணி அரசுத் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தீவிரவாதிகளின் கூடாரமாக பாகிஸ்தான் மாறி வருகிறது. தீவிரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து நெருக்குதல் கொடுத்து வருகின்றன. இதுபோன்ற நிலையில் தாலிபான் தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர் ஒருவரை பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
|
| < முந்தைய | அடுத்த > |
|---|






தாலிபான் தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர் ஒருவரை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
