| விமானத்தில் ஓட்டை: 350 பயணிகள் உயிர் தப்பினர் |
|
|
| வா.கி.குமார் | |
| 26. July 2008 20:37 | |
|
ஆஸ்திரேலியாவிலிருந்து லண்டனுக்கு வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்த குவாண்டாஸ் விமானத்தின் வலது இறக்கைக்குக் கீழ் பகுதியில் மிகப் பெரிய ஓட்டை ஏற்பட்டது. இதனால் பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் அவசரகால கதவு வழியாக வெளியேற்றப்பட்டனர். பயணிகளில் சிலர் மட்டும் வாந்தி எடுத்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தின் வலது பகுதியில் 3 மீட்டர் சுற்றளவுக்கு மிகப் பெரிய ஓட்டை ஏற்பட்டுள்ளதாக மணிலா சர்வதேச விமான நிலைய துணை மேலாளர் ஆக்டவியோ லினா தெரிவித்தார். சில பயணிகள் வாந்தி எடுத்தபோதிலும், அனைத்து பயணிகளும் பீதியுடன் காணப்பட்டதாக அவர் கூறினார். விமானம் பறந்து கொண்டிருக்கும்போது மிகப் பெரிய வெடிச் சத்தம் கேட்டதாகவும், உடனே பிராணவாயு (ஆக்சிஜன்) முகமூடிகள் வந்ததாகவும் சில பயணிகள் உள்ளூர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளனர். பயணிகள் அனைவரும் மணிலாவில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விமானம் பழுது பார்க்க அனுப்பப்பட்டதாக விமான நிலைய பொது மேலாளர் அல்ஃபோன்úஸô குஸி தெரிவித்தார். விமானம் 20 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது ஓட்டை ஏற்பட்டதாகவும் அப்படியே 6 ஆயிரம் மீட்டர் உயரத்துக்கு கீழிறங்கியதாகவும் சில பயணிகள் கூறியதாக ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியாகும் ஹெரால்டு சன் ஆன்லைன் இணையதள செய்தி தெரிவிக்கிறது. ஹாங்காங் விமான நிலையத்தை சென்றடைய ஒரு மணி நேரம் முன்னதாக இந்த விபத்து ஏற்பட்டதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. |
| < முந்தைய | அடுத்த > |
|---|





ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது மிகப் பெரிய ஓட்டை ஏற்பட்டது. இருப்பினும் இதில் பயணம் செய்த 350 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
