| காஷ்மீர் மக்களின் முடிவை உலக நாடுகள் ஏற்க வேண்டும் |
|
|
| வா.கி.குமார் | |
| 26. July 2008 20:42 | |
|
லண்டனில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற அவர், தெற்காசியாவில் அமைதி மற்றும் நல்லிணக்கம் என்ற தலைப்பில் பேசுகையில் இவ்வாறு கூறினார். தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி நிலவ, இந்தியாவும்-பாகிஸ்தானும் ஆக்கப்பூர்வ பேச்சு நடத்துவது அவசியம். காஷ்மீர் மக்களின் விருப்பப் படியே, காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காணப்பட வேண்டும். இந்த பிரச்னையில், காஷ்மீர் மக்களின் சுய முடிவை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும். இதனை தீவிரவாதத்துடன் ஒருபோதும் தொடர்புபடுத்தக் கூடாது. தற்போதைய சூழலில், ஆப்கானிஸ்தானுடன் ஏற்பட்டுள்ள முரண்பாடும், காஷ்மீர் விவகாரமும் தான் பாகிஸ்தானுக்கு முக்கிய பிரச்னையாக உள்ளன. இந்த இரு விவகாரங்களுக்கும் தீர்வு காணப்பட்டால்தான், இந்த பிராந்தியத்தில் வசிக்கும் மக்கள் அமைதியுடனும், பொருளாதார நிறைவுடனும் வாழ முடியும். இந்தியாவுடன் மேற்கொண்டுள்ள அமைதி நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்புக்கும் இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை மூலம் பல்வேறு பிரச்னைகளுக்கு சுமூகத் தீர்வு எட்டப்படும் என குரேஷி நம்பிக்கை தெரிவித்தார். |
| < முந்தைய | அடுத்த > |
|---|




காஷ்மீர் விவகாரத்தில் அப்பகுதி மக்களின் முடிவை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெக்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.
