| பிரிட்டன் இடைத் தேர்தலில் ஆளும் கட்சி தோல்வி |
|
|
| வா.கி.குமார் | |
| 26. July 2008 20:51 | |
|
தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுனுக்கு இந்தத் தோல்வி மிகப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. அவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர். கிளாஸ்கோ கிழக்குத் தொகுதியில் அவரது தொழிலாளர் கட்சி எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அக்கட்சி தோல்வி அடைந்திருப்பது கார்டன் பிரவுனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற பேச்சு கட்சியினரிடையே எழுந்துள்ளது. தொழிலாளர் கட்சி எம்.பி. டேவிட் மார்ஷல், உடல் நிலை சரியில்லாததால் கிளாஸ்கோ கிழக்கு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். அதனால் அங்கு இடைத் தேர்தல் நடந்தது. ஸ்காட்டிஷ் தேசிய கட்சி வேட்பாளர் ஜான் மேசன் இதில் வெற்றி பெற்றார். மக்கள் பிரச்னைகளை பிரதமர் கார்டன் பிரவுனும் அவரது அரசும் கண்டுகொள்ளவில்லை என்பதையே இந்த தேர்தல் முடிவு காட்டுகிறது என்று அவர் கூறினார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரிட்டிஷ் பிரதமராக பொறுப்பேற்றார் பிரவுன். அதன் பிறகு அங்கு நடந்த பல தேர்தல்களில் அவரது தொழிலாளர் கட்சி தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது. உள்ளாட்சி தேர்தலிலும் லண்டன் மேயர் தேர்தலிலும் தொழிலாளர் கட்சிக்கு பெரிய தோல்வி ஏற்பட்டது. |
| < முந்தைய | அடுத்த > |
|---|





பிரிட்டனில் கிளாஸ்கோ கிழக்கு தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி தோல்வி அடைந்தது. ஸ்காட்டிஷ் தேசிய கட்சி வெற்றி பெற்றது.
