20. November 2008 15:43
 
 
முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
யூரோ 2008
காணொளி
படத்தொகுப்பு
வசந்தம்
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் தகவல்
தகவல் திரட்டு
Login Form





உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
முக்கிய ஆய்வு
3. October 2008 18:45
15. October 2008 12:52
27. August 2008 15:01
12. October 2008 00:13
29. September 2008 22:52
பாகிஸ்தான் உளவு நிறுவனம் ஐ.எஸ்.ஐ.யின் அதிகாரம் குறைக்கப்படுகிறது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வா.கி.குமார்   
28. July 2008 07:08

pakistan.jpgபாகிஸ்தானில் உள்ள உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யின் வானளாவிய அதிகாரம் குறைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அந்த உளவு அமைப்பை உள்துறை அமைச்சரின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

யாரும் கேள்வி கேட்கமுடியாது

பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.(இண்டர் சர்வீஸ் இண்டலிஜென்ட்ஸ்)யின் அதிகாரம் வானளாவியது.

அது அரசாங்கத்தில் உள்ள ஒரு அரசாங்கமாக செயல்பட்டு வந்தது. அது எடுக்கும் எந்த நடவடிக்கையையும் யாரும் கேள்வி கேட்க முடியாது. யாருடைய அனுமதியும் இல்லாமல் அது எந்த ஒரு செயலிலும் ஈடுபடலாம்.

ராணுவ அமைச்சரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தாலும் அது யாருக்கு கட்டுப்படாத கோவில் காளையாக தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாகத் தான் செயல்பட்டு வருகிறது.

உள்துறை அமைச்சகத்தின் கீழ்

இப்படி பிரேக் பிடிக்காத வாகனம் போல டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்கும் அந்த அமைப்பின் அதிகாரங்களை குறைக்க பாகிஸ்தான் அரசு தீர்மானித்து உள்ளது.

அதை உள்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வர பிரதமர் கிலானி உத்தரவிட்டு இருக்கிறார். இது தொடர்பாக முறைப்படியான நோட்டிபிகேஷன் வெளியிடப்பட்டு உள்ளது.

இண்டலிஜென்ட்ஸ் பீரோ என்ற அமைப்பும் உள்துறை அமைச்சரின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது.

உள்துறை அமைச்சரின் நிர்வாக, நிதி, நடைமுறைக்கட்டுப்பாட்டில் இந்த 2 அமைப்புகளும் இருக்கும் என்று அந்த அரசு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் கீழ் ஐ.எஸ்.ஐ. அமைப்பு கொண்டு வரப்பட்டு இருப்பதற்கு அந்த நாட்டு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

உள்நாட்டு அரசியலில் தலையிட்டு அந்த அமைப்பு குழப்பத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

 

 
< முந்தைய   அடுத்த >